- Advertisement -
Homeபொழுதுபோக்குஆளாளுக்கு போடும் புது கண்டிசன்கள், கமல், சிம்புவுக்கு நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் மணிரத்னம் - தக்லைப்...

ஆளாளுக்கு போடும் புது கண்டிசன்கள், கமல், சிம்புவுக்கு நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் மணிரத்னம் – தக்லைப் பரிதாபங்கள்

- Advertisement -

இந்திய அளவில் சிறந்த இயக்குனர் என்று சொல்லப்படுகிற இயக்குனர் மணிரத்னம், இப்போது தக்லைப் படத்தின் படப்பிடிப்பை துவங்கி விட்டு, ஏன் இந்த படத்தை ஆரம்பித்தோம் என்று புலம்பும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். அதிலும் கமலும், சிம்புவும் ஆளுக்கு ஒருபுறம் தரும் டார்ச்சர் தாங்க முடியாமல் அவர் தவிப்பதாக தகவல் வெளிவந்துள்ளன. இதிலும் ஆளாளுக்கு கண்டிசன் போட்டு அவரை வெறுப்பேற்றுகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன், திரிஷா, அபிராமி, துல்கர் சல்மான், ஜெயம் ரவி உள்ளிட்ட முக்கிய நட்சத்திர நடிகர்களை வைத்து தக்லைப் என்ற படத்தின் படப்பிடிப்பை துவக்கினார் இயக்குனர் மணிரத்னம். கடந்த 1987ம் ஆண்டில், நாயகன் படத்துக்கு பிறகு 36 ஆண்டுகள் கழித்து இந்த படத்தில், கமலும் மணிரத்னமும் இணைந்து பணியாற்றுகின்றனர் என்பதால் படத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் தக்லைப் படத்தில் கமிட் ஆன துல்கர் சல்மானிடம் படத்தின் கதை மற்றும் துல்கர் சல்மான் நடிக்க வேண்டிய கேரக்டர் குறித்து மணிரத்னம் எதுவுமே கூறவில்லை. முக்கிய படங்களில் பிஸியாக நடித்துவரும் துல்கர் சல்மான், என்ன கேரக்டர் என்றே தெரியாமல் எப்படி நடிப்பது, என அந்த படத்தை விட்டு விலகிவிட்டார். அதே போல் ஜெயம் ரவியும் அந்த படத்தை விட்டு வெளியேறி விட்டார்.

மலையாள நடிகர் துல்கர் சல்மானை காட்டிலும், ஜெயம் ரவி தக்லைப் படத்தில் இருந்து வெளியேறியதுதான் கோலிவுட் வட்டாரத்தில் பயங்கர ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் பொன்னியின் செல்வன் படத்தில், ராஜராஜ சோழன் கேரக்டரை ஜெயம் ரவிக்கு மணிரத்னம் கொடுத்திருந்தார்.

- Advertisement -

அதுமட்டுமின்றி ஜெயம் ரவி, மணிரத்னம் மற்றும் கமல் மீது அதிக அபிமானம் கொண்டவர். அப்படிப்பட்டவர் விலக காரணம், 30 நாட்கள் கால்ஷீட்டை 2 முறை ஜெயம் ரவி தந்தும், அதை கடைசி நேரத்தில் மணிரத்னம் வேண்டாம் என மறுத்து 2 மாதங்களை வீணாக்கியதுதான். இந்நிலையில் துல்கர் சல்மான் கேரக்டரில் நடிக்க சிம்புவை, கமிட் செய்திருக்கிறார் மணிரத்னம். சிம்பு வேண்டாம். சரியாக ஷூட்டிங் நடக்காது என துவக்கத்திலேயே மறுத்திருக்கிறார் கமல். நான் சொன்னால் சிம்பு கேட்பார் என்று சிம்புவுக்கு சப்போர்ட் செய்திருக்கிறார் மணிரத்னம்.

ஆனால் சிம்பு, படத்தில் என் கேரக்டர் முழுமையாக இல்லை. படம் முழுக்க கமலுடன் நான் வருவது போல வேண்டும். அதுவும் வில்லன் கேரக்டர் என்பதால் எனக்கு அதிக காட்சிகள் இருந்தால் தான் இந்த படத்தில் நடிப்பேன் என கண்டிசன் போட்டிருக்கிறார். இதனால் பரிதாப நிலையில், நொந்து போயிருக்கிறார் மணிரத்னம்.

- Advertisement -

சற்று முன்