சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று ஒரு படவிழாவில் பேசும் போது பணம் குறித்து சிலாகித்து பேசியிருந்தார். அந்த காசு இந்த காசு இல்லீங்க காசு காசுதான். அந்த காசு மட்டும் உங்ககிட்ட இருந்த எல்லா சாமியும் ஆமாம் சாமிதான் என்று அவர் அந்த மேடையில் பேசியது பெரிய அளவில் இணையத்தில் வைரலானது.
இந்த டயலாக்கை தனது வாழ்க்கையின் முக்கிய தத்துவமாக நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது பின்பற்ற துவங்கியிருக்கிறார். ஆரம்பத்தில் விஜய் டிவியில் அது இது எது என்ற காமெடி ஷோவில் காம்பியராக இருந்தவர்தான் சிவகார்த்திகேயன். பிறகு மெரினா படம் மூலம் ஹீரோவானார்.
தொடர்ந்து மனம் கொத்தி பறவை எதிர்நீச்சல் காக்கிசட்டை ரெமோ வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினிமுருகன் சீமராஜா வேலைக்காரன் போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார். டாக்டர் மாவீரன் அயலான் பராசக்தி அமரன் போன்ற படங்கள் அவரை நட்சத்திர ஹீரோவாக மாற்றியது.
இப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சேயோன் என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதற்கிடையே ஏடிஎம் என்ற தங்க நகை கடை விளம்பரத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். ஏடிஎம்மில் தங்கம் வாங்கலாம் என்று அவரது விளம்பரம் பெரிய அளவில் இணையத்தில் வைரலானது.
மேலும் அந்த ஏடிஎம் நகைக்கடை திறப்பு விழாவில் அவர் பங்கேற்று கடையை திறந்து வைத்தார். இதையடுத்து தொடர்ந்து விளம்பர படங்களில் நடிக்க சிவகார்த்திகேயன் ஆர்வம் காட்டி வருகிறார். 3 முதல் 5 நாட்கள் கலந்துக்கொள்ளும் விளம்பர படங்களில் ரூ. 10 கோடி வரை சம்பளம் கிடைப்பதால் படப்பிடிப்புக்கு இடையே அதிக விளம்பர படங்களில் நடித்து கல்லா கட்டவும் சிவகார்த்திகேயன் முடிவு செய்திருக்கிறார்.
ஆனால் அதே நேரத்தில் பெரிய தொழில் நிறுவனங்கள், பெரிய தயாரிப்புகளின் விளம்பரங்களில் மட்டுமே நடிக்கவும் அவர் முடிவு செய்திருக்கிறார். இதுவரை 4 விளம்பர படங்களில் நடிக்க அவர் கமிட் ஆகியுள்ளார். பிரபு சத்யராஜ் பார்த்திபன் விஜய் சேதுபதி கார்த்தி அஜீத்குமாரை தொடர்ந்து இனி சிவகார்த்திகேயனையும் அதிக விளம்பர படங்களில் பார்க்கலாம்.





