- Advertisement -
Homeபொழுதுபோக்குசென்னையில் தங்கறதுக்கு இடம் இல்லே, வீடு இல்லே - 45 நாள் பிளாட்பாரத்துல தான் படுத்து...

சென்னையில் தங்கறதுக்கு இடம் இல்லே, வீடு இல்லே – 45 நாள் பிளாட்பாரத்துல தான் படுத்து தூங்கினேன் – இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

கடந்த 1980களில் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வந்தவர் எஸ்ஏ சந்திரசகேர். இவரது படங்கள் சட்டம் ஒழுங்கு நீதி சமுதாயம் அரசியல் என சமூக கருத்துகளை புரட்சிக்கரமாக பேசியதால் ரசிகர்கள் மத்தியில் புரட்சி இயக்குனர் என்றே அழைக்கப்பட்டார். நடிகர் விஜயகாந்த் நடித்த பல படங்களை அப்போது இயக்கினார்.

தனது மகன் விஜயை சினிமாவில் அறிமுகப்படுத்திய எஸ்ஏ சந்திரசேகர், கடந்த பல ஆண்டுகளாக படம் எதுவும் இயக்கவில்லை. ஆனால் பல படங்களில் அவர் நடித்திருக்கிறார். குறிப்பாக மாநாடு கொடி டிராபிக் ராமசாமி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவரது மனைவி ஷோபா சந்திரசேகர் ஒரு பின்னணி பாடகி என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் எஸ்ஏ சந்திரசேகர் கூறியதாவது, சென்னையில் இருக்குறதுக்கு இடம் இல்லை. யார் வீட்டுக்கும் போறதுக்கு மனசு வரவில்லை, எங்க தங்குறது? சென்னை டி நகர் பாண்டிபஜார் பிளாட்ஃபார்ம்ல தங்கினேன்.

இப்போ அந்த இடத்துல நாயுடு ஹால் ஷோ ரூம் இருக்கு. அன்னைக்கு சாதாரணமா சின்ன சின்ன பொட்டிக்கடை இருந்துச்சு. ஒரு கார்ப்ரேஷன் பைப் இருந்துச்சு. அந்த இடத்துல 45 நாள் படுத்துக் கிடந்திருக்கேன். சைக்கிள் ரிக்சாவில் கூட படுத்துப்பேன்.

அப்படி தங்கினப்போ சில நாள் மழை வரும், அப்போ ஓரமா நிக்கிற சைக்கிள் ரிக்சாவில் போய் படுத்துப்பேன். இன்னைக்கு நான் என்னை திரும்பி பார்க்கிறேன். 70 படம் இயக்கியிருக்கேன். சில ஹீரோஸ் சில ஹீரோயினை அறிமுகப்படுத்தியிருக்கேன். டைரக்டர்ஸ் டெக்னிஷியன்ஸ் என்கிட்டே இருந்து போயிருக்காங்க.

இதெல்லாம் ஒரு மேஜிக் மாதிரி இருக்கு, வாழ்க்கையில் சாதிக்கணும்னு நினைக்கிறவங்களுக்கு என் வாழ்க்கை ஒரு பாடமாக இருக்கும் என்று அந்த நேர்காணலில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியிருக்கிறார். அப்படி பிளாட்பாரத்தில் படுத்து தூங்கிய எஸ்ஏ சந்திரசேகர் மகன் விஜய் தான் இன்று தமிழக முதல்வராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்