நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கும் படம் கல்கி 2898 ஏடி. இந்த படம் இதுவரை 900 கோடி ரூபாய் உலகம் முழுவதும் வசூல் சாதனை புரிந்துள்ளதாக, அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படம் ரூ. 740 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
கல்கி படத்தை பொருத்த வரை ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இந்த படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தெலுங்கு ரசிகர்கள், தங்களது அபிமான தெலுங்கு நாயகன் பிரபாஸை கொண்டாடி வரவேற்று மகிழ்ந்து வருகின்றனர். அதே போல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் இந்த படத்தை ரசிகர்கள், வெறித்தமான பார்த்து வருகின்றனர்.
ஆனால் தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் கல்கி படத்துக்கு போதிய வரவேற்பும் ஆதரவும் ரசிகர்கள் மத்தியில் கிடைக்கவில்லை என்பதுதான் இதுவரை நீடித்துவரும் நிலை. படம் வெளியாகி 10 நாட்களுக்கு மேலான நிலையில், கல்கி 2898 ஏடி படம், தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் பெரிய அளவில் வசூலில் முன்னேறவில்லை என்பதுதான் உண்மை.
இந்த படத்தில் அமிதாப் பச்சன், துல்கர் சல்மான், தீபிகா படுகோன், விஜய் தேவர கொண்டா, வில்லன் கேரக்டரில் கமல்ஹாசன் நடித்திருந்தாலும், படத்தின் கதை தமிழ் ரசிகர்களுக்கு புரியவில்லை. புராணக் கதையும், டெக்னிக்கலையும் இரண்டற கலந்து கொடுத்துள்ளதால், தமிழ் ரசிகர்களுக்கு அலுப்பும், சலிப்பும்தான் ஏற்படுகிறது.
எனினும் இதில் கல்கி படத்தை தமிழ்நாட்டில் தியேட்டர் உரிமை பெற்று வினியோகம் செய்த வினியோகஸ்தர்களுக்கு ஏமாற்றம் இருந்தாலும் மற்றொரு ஜாக்பாக் அடித்திருக்கிறது. அதாவது கல்கி 2898 ஏடி படத்தை தமிழ்நாட்டில் திருப்புலி பிரசாத் என்பவர்தான் டிஸ்ரிப்யூட் எடுத்து வினியோகம் செய்துள்ளார்.
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் சிங்க நடை என்ற படத்தை தயாரித்து வருபவர் திருப்புலி பிரசாத். அதனால் கல்கி படம் ஒருவேளை சரியாக போகாவிட்டால், அந்த படத்தின் விநியோகஸ்தர்களுக்கு சிவகார்த்திகேயன் படத்தை தருவதாக ஏற்கனவே அவர் கூறியிருக்கிறார். அதனால் இந்த பிரபாஸ் படம் தந்த நஷ்டத்தை, சிவகார்த்திகேயன் படம் லாபம் தந்து உதவி செய்யும் என்று வினியோகஸ்தர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.





