இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை வெற்றியை பெற்ற படம் மூக்குத்தி அம்மன். இப்போது இந்த படத்தின் 2ம் பாகம் உருவாகி வருகிறது. இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் மீண்டும் நாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார்.
மேலும் இந்த படத்தில் நடிகைகள் சினேகா இனியா ரெஜினா கசாண்ட்ரா துனியா விஜய் யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் இயக்குனர் சுந்தர் சியும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
திருமணத்துக்கு பிறகு நடிகை நயன்தாரா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை. இப்போது திரைக்கு வந்துள்ள டாக்ஸிக் மற்றும் கவின் நயன்தாரா நடித்துள்ள ஹாய் மற்றும் மூக்குத்தி அம்மன் 2 ஆகிய படங்களை நயன்தாரா மிகவும் எதிர்பார்த்திருக்கிறார். அதனால் இந்த படங்களின் பிரமோசன் நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துக்கொண்டு வருகிறார்.
மூக்குத்தி அம்மன் 2 படம் பக்தியை மையப்படுத்திய படம் என்பதால் இதில் விஎஃப்எக்ஸ் காட்சிகளும் சிஜி தொழில்நுட்ப காட்சிகளும் அதிகளவில் இடம்பெறுகின்றன. இதற்காக பல மாதங்களாக மூக்குத்தி அம்மன் 2 படத்தின் சிஜி மற்றும் விஎஃப்எக்ஸ் தொழில்நுட்ப காட்சிகளுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இன்னும் அந்த பணிகள் எதுவும் முடிவடையவில்லை. இன்னும் சில மாதங்களுக்கு இந்த பணிகள் நீடிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் பிரமாண்ட காட்சிகள் பக்தி காட்சிகள் சண்டை மோதல் காட்சிகள் என படத்துக்கு விறுவிறுப்பு சேர்க்கும் இந்த காட்சிகளை மிக சிறப்பாக கொண்டு வர இயக்குனர் சுந்தர் சி திட்டமிட்டுள்ளார்.
இந்த சூழலில் மூக்குத்தி அம்மன் 2 படத்தை வரும் தீபாவளிக்கு நவம்பர் மாதம் கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த விஎஃப்எக்ஸ் சிஜி தொழில்நுட்ப பணிகள் முடிவடையாத பட்சத்தில் அடுத்த ஆண்டு 2027ல் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவிலும் இருந்து வருகின்றனர். எனவே இந்த படம் தீபாவளி ரிலீஸா பொங்கல் ரிலீஸா என்பதில் மர்மம் நீடிப்பதால் ரசிகர்களும் குழப்பமடைந்துள்ளனர்.





