- Advertisement -
Homeபொழுதுபோக்குயாரும் என்னை கண்டுக்கலே… கையில் 200 ரூபா இருந்துச்சு…அப்போ நான் எடுத்த முடிவு - தனது...

யாரும் என்னை கண்டுக்கலே… கையில் 200 ரூபா இருந்துச்சு…அப்போ நான் எடுத்த முடிவு – தனது கடந்தகாலம் குறித்து பேசிய நடிகர் யோகிபாபு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களாக வந்த பலரும் முன்னணி நட்சத்திரங்களாக மாறியிருக்கின்றனர். ஆனால் ஒரு சில வாரிசு நடிகர்கள் சினிமாவில் நுழைந்தும் ரசிகர்களிடம் தொடர்ந்து பேராதரவு கிடைக்காததால் பின்தங்கி விடுகின்றனர். பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்காமல் சில ஆண்டுகளில் காணாமலும் போய் விடுகின்றனர்.

ஆனால் ஒரு சில நடிகர்கள் சினிமா சார்ந்தவர்களின் சிபாரிசோ சினிமா சார்ந்தவர்களின் பின்புலமோ இல்லாமல் சினிமாவில் வந்து ஜெயிக்கின்றனர். முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கின்றனர். சினிமாவில் நடிக்க ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே நல்ல ஒரு இடத்துக்கு வந்துவிடுகின்றனர். கோடிக்கணக்கில் சம்பளமும் வாங்குகின்றனர்.

- Advertisement -

அந்த வரிசையில் நடிகர்கள் அஜீத்குமார் சிவகார்த்திகேயன் சந்தானம் சூரி யோகிபாபு என சிலரை குறிப்பிட்டுச் சொல்லலாம். அதிலும் நடிகர் யோகிபாபு விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் கூட்டத்தோடு ஒருவராக நின்றவர். பிறகு சினிமாவிலும் அதே போல்தான் ஆரம்பத்தில் கூட்டத்தில் ஒருவராக நடித்தார். பிறகு அப்படியே காமெடி நடிகராக மாறினார்.

இப்போது தமிழ் சினிமாவில் வடிவேலு சந்தானம் சூரி சதீஷ் என வரிசையாக ஹீரோக்களாக மாறிவிட்ட நிலையில் யோகிபாபு மட்டுமே காமெடி நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அவரும் சில நேரங்களில் கதையின் நாயகனாக சில படங்களில் நடித்தும் வருகிறார். ஆனால் ஆரம்பத்தில் சினிமாவில் வருவதற்கு காரணமாக இருந்த ஒரு நெகிழ்ச்சியான ஒரு சம்பவத்தை யோகிபாபு கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் யோகி பாபு கூறியதாவது, அப்போது வேலையில்லாமல் நிறைய நாள் இருந்தேன். லொள்ளு சபாவிலேயும் என் நடிப்பு சரியா போகலே. வீட்டிலேயும் மரியாதை இல்லை. நண்பர்கள் கூட கூப்பிட்டு பேச யோசிச்சாங்க. ஏன்னா அவங்க அவங்க ஒரு வேலைக்கு போயிட்டு இருக்காங்க. நான் போய் நின்னா கூட திரும்பிப்பாங்க.

வீட்டுல சண்டை அதிகமா ஆயிடுச்சு. மன வருத்தம் அதிகமாகி பூந்தமல்லி பஸ் ஸ்டாண்டுல உட்கார்ந்துட்டு ஒரு நாள் யோசிச்சேன். கையில 200 ரூபாய் இருந்தது. திருத்தணிக்கு பஸ் ஏறிப் போனேன். மலை மேல தனியா படுத்துட்டு வேண்டிக்கிட்டு வந்தேன். அதுக்கப்புறம் கொஞ்சநாள்ல மாற்றம் வர ஆரம்பிச்சிருச்சு. அப்புறம் முருகன் கொஞ்சம் தூக்கி விட்டான் என்று நடிகர் யோகி பாபு அந்த நேர்காணலில் உருக்கமாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்