தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பிறகு ஹீரோவாக பல படங்களில் நடித்து இப்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் நடிகர் சத்யராஜ். எந்த விதமான கேரக்டர் என்றாலும் அதில் சத்யராஜ் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவார். ஆரம்பத்தில் கொடூர வில்லனாக அவர் நடித்த படங்களை இப்போது பார்த்தாலும் ரசிக்க வைப்பார்.
ஹீரோவாக மாறிய சத்யராஜ் படங்களில் அவருக்கு ஜோடியாக பல நடிகைகள் நடித்துள்ளனர். ரேகா அம்பிகா ராதா குஷ்பு மீனா ராதிகா நக்மா ரூபிணி ஊர்வசி பானுப்பிரியா ரோஜா சுகன்யா கௌதமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒரு படத்தில் கோவை சரளா கூட சத்யராஜின் மனைவியாக நடித்திருப்பார்.
இந்நிலையில் நடிகர் சத்யராஜ் ஒரு நேர்காணலில் கூறியதாவது, நான் எத்தனையோ ஹீரோயின்களுடன் நடிச்சுட்டேன். நான் நடிச்ச கதாநாயகிகளில் ஒரு முழுமையான நடிகை என்றால் அது பானுப்பிரியா தான். முதலில் ஷூட்டிங்குக்கு சரியான நேரத்தில் வருவது மத்தவங்களுக்கு கொடுக்கிற மரியாதை சிறப்பாக டான்ஸ் ஆடுவது என எல்லாவற்றிலும் அவர் ஒரு சிறந்த நடிகை.
டயலாக் மாடுலேசன் சூப்பராக தெரியும். பெர்ஃபாமென்ஸ் என்றால் சூப்பர். சோக காட்சியா காமெடி காட்சியா அதாவது என்ன காட்சியாக இருந்தாலும் ஒரு விஷயத்தில் பானுப்பிரியா தப்பாக நடித்து விட்டார் என்ற ஒரு வார்த்தையே கிடையாது. டான்ஸ் எவ்வளவோ நடிகைகள் ஆடியிருக்கின்றனர். சீனியர் நடிகைகள் எல்லாம் இருக்கின்றனர். அதை சொன்னால் தப்பாக போயிடும்.
ஆனால் எனக்கு தெரிந்து சிறந்த டான்ஸர் அது பானுப்பிரியா தான். ஒரு பைத்தியமா ஆராரோ ஆரிராரோ படத்தில் டான்ஸ் ஆடுவாங்க. அதாவது பைத்தியமாகவும் தெரியணும். அதே நேரத்துல துள்ளி ஒரு டான்ஸ் ஆடணும். அதை வந்து அவ்வளவு பிரமாதமா பானுப்பிரியா பண்ணியிருப்பாங்க.
அப்புறம் என்னுடன் அதிக படங்களில் நடித்தவரும் பானுப்பிரியா தான். நிறைய படங்களில் என்னுடன் நடித்திருக்கிறார். அவர் நல்ல ஜோடி என்று சொல்லலாம் என்று அந்த நேர்காணலில் நடிகர் சத்யராஜ் கூறியிருக்கிறார். பிரம்மா பங்காளி மகுடம் புது மனிதன் தெற்கு தெரு மச்சான் ஜோர் கட்டளை கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் சத்யராஜ் பானுப்பிரியா இணைந்து நடித்துள்ளனர்.





