ஓ மை கடவுளே டிராகன் போன்ற படங்களை இயக்கியவர் அஸ்வத் மாரிமுத்து. இந்த 2 படங்களுமே மிகப்பெரிய வெற்றியை பெற்றன. கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் லவ்டுடே என்ற அவரது அடுத்த படத்தில் அவரே ஹீரோவாகவும் நடித்திருந்தார். இந்த 2 படங்களுமே சூப்பர் ஹிட் ஆன நிலையில் டிராகன் படமும் பெரிய வெற்றியை பிரதீப்புக்கு கொடுத்தது.
அதே நேரத்தில் டிராகன் படத்தில் அஸ்வத் மாரிமுத்து ஒரு கேரக்டரிலும் நடித்திருந்தார். இப்போது அஸ்வத் மாரிமுத்து ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படமான தர்மன் படத்தை டைரக்ட் செய்து வருகிறார். நடிகர் கமல்ஹாசன் இந்த படத்தை தயாரிக்கிறார். தர்மன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இதற்கிடையே இயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் ஒரு படத்தை சொந்தமாக தயாரிக்கிறார். இதில் நடிகை மமிதா பைஜூ முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குனர்கள் 6 பேர் இணைந்து இந்த படத்தை டைரக்ட் செய்து வருகின்றனர்.
இந்த படத்தில் பிரதீப்பின் நெருக்கமான நண்பரும் டிராகன் படத்தை இயக்கியவருமான அஸ்வத் மாரிமுத்து போலீஸ் அதிகாரி கேரக்டரில் அந்த படத்தில் நடிப்பதாக ஒரு தகவல் வெளியானது. போலீஸ் கெட்டப்பில் இருக்கும் அவரது புகைப்படங்களும் வெளியாகி இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில் தற்போது பிரதீப் ரங்கநாதனின் படத்தில் இருந்து அஸ்வத் மாரிமுத்து விலகி விட்டார் என்ற தகவல் வந்துள்ளது. இந்த படத்தை டைரக்ட் செய்து வரும் 6 உதவி இயக்குனர்களுக்கும், அஸ்வத் மாரிமுத்துவுக்கும் சரியாக ஒத்துப் போகாத நிலையில் அந்த படத்தில் இருந்து அஸ்வத் மாரிமுத்து விலகி விட்டார் என்பது உறுதியாகி உள்ளது.
அஸ்வத் மாரிமுத்துவும் பிரதீப் ரங்கநாதனும் நெருங்கிய நண்பர்கள் என்றாலும் சரியான முறையில் அந்த படத்தின் 6 இயக்குனர்கள் சரியாக நடக்காததால் அவர் கோபத்தில் விலகியுள்ளார். அதே நேரத்தில் இதற்கு பதிலாக தர்மன் படத்தில் ஒரு கேமியோ ரோலில் அஸ்வத் மாரிமுத்து ரஜினியுடன் சில காட்சிகளில் வர முடிவு செய்திருப்பதாகவும் லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது.





