- Advertisement -
Homeபொழுதுபோக்குபெட்டியை தூக்கிட்டு நடந்து போனதை வடிவேலு மறந்துட்டார், தலைக்கணம் வந்துடுச்சு - வெளிப்படையாக பேசிய சீனியர்...

பெட்டியை தூக்கிட்டு நடந்து போனதை வடிவேலு மறந்துட்டார், தலைக்கணம் வந்துடுச்சு – வெளிப்படையாக பேசிய சீனியர் நடிகர் சங்கிலிமுருகன்!

- Advertisement -

தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தனக்கான ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் சங்கிலி முருகன். கடந்த 1980களில் வெளியான பல படங்களில் அவர் இளம் வயதில் நடித்திருக்கிறார். பல படங்களில் ஊர் தலையாரி கேரக்டரில் சங்கிலி முருகன் நடிப்பார் அல்லது ராதாரவி நடிப்பார். அந்தளவுக்கு அந்த கேரக்டருக்கு இருவரும் பொருத்தமாக இருப்பார்கள்.

இப்போதும் வயதான தோற்றத்தில் நடிகர் சங்கிலி முருகன் நடித்து வருகிறார். குறிப்பாக கபாலி மரகதநாணயம் மாயாவி புலி போன்ற படங்களில் சங்கிலி முருகன் நடித்திருந்தார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்ல, பல படங்களை சொந்தமாக தயாரித்த தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிகர் கமல்ஹாசன் இணைந்து நடித்த தேவர் மகன் படத்தில் நடிகர் சங்கிலி முருகன் சிவாஜியிடம் கணக்குப்பிள்ளையாக வேலை பார்ப்பார். அதே படத்தில் சிவாஜி வீட்டு கார் டிரைவராக நடிகர் வடிவேலு நடித்திருப்பார். படத்தில் பல காட்சிகளில் சங்கிலி முருகன் வடிவேலு இணைந்து காணப்படுவார்கள்.

இந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கிலி முருகன் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்று பேசினார். அப்போது நடிகர் வடிவேலு குறித்து நடிகர் சங்கிலி முருகன் கூறியதாவது, சுறா படத்தில் நடிகர் வடிவேலுவை நடிக்க வைக்கணும்ன்னு படக்குழு ஆசைப்பட்டாங்க. ஆனால் அவரோட சம்பளத்தை பற்றி பேசினப்போ அவர் ரொம்ப அதிகமா கேட்டார்.

முக்கியமாக ஒரு நாளைக்கு பத்து லட்சமும் அரை நாள் வேலைக்கும் அதே அளவுக்கு பணம் கேட்டுட்டார். ஆரம்ப காலத்துல வடிவேலு ரொம்ப சிம்பிளா தான் இருந்தார். ஆனால் அப்புறமா அவரோட குணமே மாறிடுச்சு. தேவர் மகன் படத்தில் ரயில இருந்து இறங்கும்போது பெட்டியை தூக்கிட்டு போன வடிவேல் அப்போ என்கிட்ட ரொம்ப இயல்பா தான் நடந்துகிட்டார்.

ஆனா மெதுமெதுவா அவருடைய பழக்கம் மாறிடுச்சு. ஒரு கட்டத்துல அவருக்கு தலைக்கணம் வந்துடுச்சு. அதனால்தான் சுறா படத்தில் நடிக்க இவ்வளவு அதிகமாக சம்பளம் கேட்டார் என்று நடிகர் சங்கிலி முருகன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். நடிகர் வடிவேலு மார்க்கெட் உச்சத்தில் இருந்த போது ஒரு படத்தில் நடிக்க தினமும் ரூ. 10 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை தினசரி சம்பளமாக வாங்கியது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்