- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவரை மாத்த முடியாதா? அப்போ அந்த படமே வேண்டாம் , தனது அடுத்த படத்தை டிராப்...

அவரை மாத்த முடியாதா? அப்போ அந்த படமே வேண்டாம் , தனது அடுத்த படத்தை டிராப் செய்த லெஜண்ட் சரவணன் – அண்ணாச்சி இப்படி ஒரு அதிரடி முடிவு எடுத்துட்டாரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தந்தவர் இயக்குனர் துரை செந்தில்குமார். நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் காக்கிச்சட்டை நடிகர் தனுஷ் நடித்த கொடி பட்டாஸ் மற்றும் சூரி நடித்த கருடன் உள்ளிட்ட படங்களை டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற படங்களாகும்.

இந்நிலையில் லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி நடித்த லீடர் படத்தை துரை செந்தில்குமார் டைரக்ட் செய்தார். இந்த படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி நடிக்கும் அடுத்த படத்தையும் துரை செந்தில்குமாரே இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.

- Advertisement -

லீடர் படத்தில் இயக்குனர் துரை செந்தில்குமார் பழகிய விதமும் பணிபுரிந்த அணுகுமுறையாலும் மிகவும் மகிழ்ந்த லெஜண்ட் அண்ணாச்சி லீடர் படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்திலும் இயக்குனர் துரை செந்தில்குமார் தான் என தெரவித்தது மட்டுமின்றி அட்வான்ஸ் சம்பளமாக ரூ. 2 கோடி தந்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் இப்போது அந்த படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான காரணமும் தெரிய வந்துள்ளது. அதாவது லெஜண்ட் லீடர் ஆகிய படங்களை தொடர்ந்து 3வது படத்தில் சரவணன் அண்ணாச்சி நடிக்க துரை செந்தில்குமார் டைரக்ட் செய்ய இருந்தார். ஆனால் இந்த படத்தில் ஆர்ட் டைரக்டரை மாற்ற வேண்டும் என்று அண்ணாச்சி கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஏனெனில் லீடர் படத்தின் பட்ஜெட் அதிகரிக்க முக்கிய காரணமாக ஆர்ட் டிபார்ட்மென்ட் தான். அவர்கள் செட் அமைக்க அதிக செலவு வைத்ததால் பட்ஜெட் எகிறியுள்ளது. ஒரு தொழிலதிபரான அண்ணாச்சி அதை கவனத்தில் வைத்து இந்த படத்தின் அந்த ஆர்ட் டைரக்டர் வேண்டாம். வேறு ஒருவரை கமிட் செய்யுங்கள் என்று டைரக்டரிடம் கூறியிருக்கிறார்.

ஆனால் இதற்கு இயக்குனர் துரை செந்தில்குமார் சம்மதிக்கவில்லை. ஆர்ட் டைரக்டர் என்னுடைய யூனிட்டை சேர்ந்தவர். முக்கியமான ஒருவர். அவரை கண்டிப்பாக மாற்ற முடியாது என்று கூறியிருக்கிறார். அதனால் படத்தின் தயாரிப்பாளரான லெஜண்ட் அண்ணாச்சி, நான் சொல்ற ஆளை மாத்த முடியாது என்றால் அந்த படத்தையே டிராப் செய்து விடலாம் என்று கட் அண்ட் ரைட்டாக கூறியதால், ஆர்ட் டைரக்டரை மாற்றாத ஒரே காரணத்தால் அந்த படமே கைவிடப்பட்டு விட்டது.

- Advertisement -

சற்று முன்