நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அவர் நடித்த தலைவன் தலைவி படம் வெளியாகி பல மாதங்கள் ஆகிறது. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நித்யாமேனன் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. அதன்பிறகு விஜய் சேதுபதியின் படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை.
இந்த நிலையில் தயாரிப்பாளர் தாணு தயாரிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த டிரெயின் படம் பல மாதங்களாக திரைக்கு வராமல் தள்ளிப் போய் உள்ளது. இந்த படம் ஒவ்வொரு முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் பிறகு சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப் போகிறது.
அதே போல் நடிகர் விஜய் சேதுபதி நடித்த இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கிய பக்தா படமும் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் அட்லி தயாரித்துள்ளார். இந்த படத்தை வருகிற 25ம் தேதி ரிலீஸ் செய்ய படத்தின் தயாரிப்பாளர் அட்லி முடிவு செய்திருக்கிறார்.
அதே நேரத்தில் டிரெயின் படத்தை வருகிற 25ம் தேதி ரிலீஸ செய்ய தயாரிப்பாளர் தாணுவும் முடிவு செய்திருக்கிறார். இதனால் வருகிற 25ம் தேதி விஜய் சேதுபதி நடித்த டிரெயின் படமும் பக்தா படமும் ஒரே நாளில் ரிலீஸ் செய்யப்படும் ஒரு சூழல் உருவாகியுள்ளது.
அந்த தேதியில் தான் படத்தை வெளியிடுவது என்று 2 படங்களின் தயாரிப்பாளர்களும் ஒரே முடிவில் உள்ள நிலையில் விஜய் சேதுபதியை பொருத்த வரை எந்த படம் வந்தால் என்ன? இரண்டுமே நான் நடித்த படங்கள்தானே? எந்த படம் வந்தாலும் நமக்கு சந்தோஷம்தான் என்ற ஒரு மனநிலையில் இருந்து வருகிறார்.
இரண்டு படங்களில் ஒரு படத்தை வேறு தேதியில் ரிலீஸ் செய்யுங்க என்று கோரிக்கை இருந்தாலும் அப்படி தேதியை மாற்றிய பிறகு அந்த நாளில் ஒரு படம் ஏதேனும் காரணத்தால் ரிலீஸ் ஆகாமல் போய்விட்டால் மீண்டும் அந்த படம் ரிலீஸ் தேதி தள்ளிப் போகுமே என்ற மனநிலையில் 2 படங்களின் தயாரிப்பாளர்ளும் போட்டி போடுகின்றனர். ஆனால் பிக்பாஸ் 10 துவங்க உள்ளதால் அதுவும் படங்களின் ரிலீஸ் நேரத்தில் விஜய் சேதுபதிக்கு நல்ல விளம்பரத்தை கொடுக்கும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.





