- Advertisement -
Homeபொழுதுபோக்குசிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை இனி சிக்கும், 200 தொகுதிகள் வெல்வோம் என்ற திமுக இறுமாப்புக்கு...

சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை இனி சிக்கும், 200 தொகுதிகள் வெல்வோம் என்ற திமுக இறுமாப்புக்கு இதுதான் பின்னணியா? – நடிகர் விஜய் கேள்வி!

- Advertisement -

தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் பல விதங்களில் ரூ. 1000 கோடி வரை முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. திமுக அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், டாஸ்மாக் ஊழலில் அமலாக்கத்துறையின் அறிக்கை குறித்து கடுமையாக திமுக அரசை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து தவெக தலைவர் நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கை; மகளிர் தொகை வழங்குவதை பெருமையாக பறைசாற்றும் இதே திமுக அரசுதான் மக்கள் நலனை கெடுத்து மதுவிற்கு அடிமையாகும் மது விற்பனையையும் செய்கிறது. அதே மதுவை வைத்து தான் முறைகேடும் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. எந்த வகையிலும் இது போன்ற முறைகேடுகளை ஏற்கவே இயலாது என பொதுமக்களே கோபத்தில் கொந்தளிக்க தொடங்கியுள்ளனர்.

ஊழலில் காட்டாற்றையே உருவாக்க வல்லவர்கள் என்பதே திமுக ஆட்சி அதிகார வரலாறு. அமலாக்கத்துறை தற்போது கையில் அள்ளி இருப்பது ஆயிரம் கோடி ரூபாய் என்ற கையளவு நீரே. இன்னும் தீவிரமாக ஆழ்ந்து ஆராய்ந்தால் இந்த டாஸ்மாக் முறைகேட்டில் மட்டும் சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும் என்றே தெரிகிறது.

ஆகவே இந்த மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை முறையான நியாயமான விசாரணைக்கு உட்படுத்தி உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும். ஆனால் விசாரணை நியாயமாக நடக்குமா என்பது, மேலே இருக்கும் மறைமுக முதலாளிகளுக்கும் இங்கிருக்கும் அவர்களின் உறவுக்காரர்களுக்கும் மட்டுமே வெளிச்சம்.

இந்த வேளையில் இன்னொன்றையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். இது போன்ற முறைகேடுகள் மூலம் ஈட்டப்பட்ட பணம் தான் 200 தொகுதிகளை வெல்வோம் என்ற இறுமாப்பு சூளுரையின் பின்னணியாக இருக்கும் போல. ஆனால் எத்தனை கோடிகளை கொட்டினாலும் இனி இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசின் ஊழல் வித்தைகள் செல்லாது.

இவர்களை 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நிச்சயம் ஒதுக்கி தள்ளுவார்கள் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் விஜய் அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார். நடிகர் விஜய் ஆரம்பத்தில் பாயாசம் கட்சி என்றும் அரசியல் எதிரி என்றும் திமுக பெயரை சொல்லாமல் பேசி வந்த நிலையில் இப்போது நேரடியாகவே திமுக அரசை விமர்சித்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்