நடிகர் விஷால் இயக்குனராக களம் இறங்கிய படம் மகுடம். இந்த படம் கடந்த மாதம் வெளியாகி படம் பார்த்த ரசிகர்களை மிகவும் சோதித்தது. இயக்குனராக நடிகராக இந்த படத்தில் விஷால் மெகா அளவில் சொதப்பி இருந்தார். கதையே இல்லாமல் ஒரு படத்தை இயக்க விஷால் போன்றவர்களால் மட்டுமே முடியும் என்று சினிமா விமர்சகர்கள் அவரை கலாய்த்து இருந்தனர்.
இந்த நிலையில் நடிகர் விஷால் நடிக்கும் அடுத்த படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. எதிர்நீச்சல் காக்கிசட்டை பட்டாஸ் கொடி கருடன் போன்ற படங்களை இயக்கியவர் துரை செந்தில்குமார். இவர் லெஜண்ட் நடிகர் சரவணன் அண்ணாச்சி நடித்த லீடர் என்ற படத்தை டைரக்ட் செய்திருந்தார்.
இந்த படத்தை தொடர்ந்து அண்ணாச்சியின் அடுத்த படத்தையும் துரை செந்தில்குமார் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் ஆர்ட் டைரக்டரை மாற்ற வேண்டிய ஒரு சூழலில் அதை இயக்குனர் மறுத்துவிட்டதால் அந்த படமே வேண்டாம் என்று லெஜண்ட் அண்ணாச்சி கூறியதால் அந்த படம் டிராப் ஆகி விட்டது.
அதனால் நடிகர் விஷால் நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் டைரக்ட் செய்கிறார். அவர் சொன்ன கதையும் விஷாலுக்கு பிடித்துப் போனதால் உடனே ஓகே சொல்லிவிட்டார். இந்த படத்தை தயாரிப்பது தயாரிப்பாளர் லலித்குமார் தான். இவர்தான் நடிகர் விஜய் நடித்த லியோ படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஷால் ஹீரோவாக நடித்து முதன்முறையாக டைரக்ட் செய்த மகுடம் படம் ரிலீஸ் ஆனது. அப்போது ரிலீஸ் நேரத்தில் பண சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த ஒரு சூழலில் நடிகர் விஷாலுக்கு பெரும் தொகை கொடுத்து தயாரிப்பாளர் லலித்குமார் உதவியிருக்கிறார். ஆனால் அந்த படம் சிறப்பாக ஓடியிருந்தால் வாங்கிய பணத்தை விஷால் திருப்பி கொடுத்திருப்பார்.
ஆனால் மகுடம் படம் ஊத்திக்கொண்டதால் நடிகர் விஷால், தயாரிப்பாளர் லலித்குமாருக்கு பணத்தை திருப்பித் தரவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து கொடுத்த பணத்தை நடிகர் விஷாலின் சம்பளமாக நிர்ணயம் செய்து புதிய படத்தை தயாரிக்க முன்வந்துள்ளார் லலித்குமார். அண்ணாச்சி பட வாய்ப்பை இழந்த துரை செந்தில்குமாரும் இந்த படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.





