- Advertisement -
Homeபொழுதுபோக்குலெஜண்ட் மற்றும் லீடர் படங்களை தொடர்ந்து அடுத்த படத்தில் நடிக்க தயாரான சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி...

லெஜண்ட் மற்றும் லீடர் படங்களை தொடர்ந்து அடுத்த படத்தில் நடிக்க தயாரான சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி – இந்த படத்தின் டைரக்டர் அவர்தானா?

- Advertisement -

லெஜண்ட் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி அருள் சரவணன். துவக்கத்தில் தனது நிறுவனத்தின் விளம்பர படங்களில் நடித்த அவர் பிறகு சினிமாவில் நடிகராக மாறிவிட்டார். முதல் படம் லெஜண்ட் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதையடுத்து இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் லீடர் என்ற படத்தில் ஹீரோவாக அண்ணாச்சி நடித்தார். இந்த படம் முதல் படத்தை காட்டிலும் தரமாகவும் நல்ல கதைக்களத்திலும் அண்ணாச்சியை பாராட்ட வைத்தது. குறிப்பாக ஆக்சன் காட்சிகளிலும் சென்டிமென்ட் காட்சிகளிலும் லெஜண்ட் அண்ணாச்சி தரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

- Advertisement -

இந்த சூழலில் லெஜண்ட் அண்ணாச்சியின் 3வது படத்தையும் லீடர் பட இயக்குனர் துரை செந்தில்குமாரே இயக்குவதாக இருந்தது. ஆனால் ஆர்ட் டைரக்டரை மாற்றுவதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இயக்குனருக்கும் தயாரிப்பாளரான அண்ணாச்சிக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது.
அதனால் அந்த படம் டிராப் ஆகி விட்டது.

இதையடுத்து லலித்குமார் தயாரிப்பில் நடிகர் விஷால் நடிக்கும் ஒரு படத்தை இயக்க டைரக்டர் துரை செந்தில்குமார் கமிட் ஆகி விட்டார். இந்த நிலையில் லெஜண்ட் அண்ணாச்சியும் தனது 3வது பட இயக்குனரை கமிட் செய்து விட்டார். சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே உதயநிதி ஸ்டாலின் நடித்த கெத்து அருண் விஜய் நடித்த ரெட்ட தலை போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் திருக்குமரனை செலக்ட் செய்திருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் அவர் தனது பெயரை கிரிஷ் திருக்குமரன் என மாற்றியிருக்கிறார். அவரை தான் தனது 3வது படத்தின் இயக்குனராக லெஜண்ட் அண்ணாச்சி ஒப்பந்தம் செய்திருக்கிறார். இவர் இயக்குனர் ஏஆர் முருகதாஸிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற படங்களாகவும் உள்ளன.

இந்த படம் லீடர் 2 படமாக இருக்க வாய்ப்பில்லை. லீடர் படம் துணை செந்தில்குமார் இயக்கத்துடன் முடிந்து விட்டது. இப்போது லெஜண்ட் அண்ணாச்சி நடிக்கும் கிரிஷ் திருக்குமரன் இயக்கும் படம் வேறு ஒரு கதைக்களத்தில் உருவாகும் புதிய படம் என்றும் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்