- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடுதலை 2 ஷூட்டிங் 257 நாட்கள் நடந்தது; ஆனால் இன்னும் ஷூட்டிங் முடியல… இசை...

விடுதலை 2 ஷூட்டிங் 257 நாட்கள் நடந்தது; ஆனால் இன்னும் ஷூட்டிங் முடியல… இசை வெளியீட்டு விழாவில் பகீர் கிளப்பிய இயக்குனர் வெற்றிமாறன் – டிசம்பர் 20ல் படம் திரைக்கு வருமா?

- Advertisement -

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சுவாரியார், பவானிஸ்ரீ, சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் விடுதலை படம் வெளியான நிலையில், அதன் தொடர்ச்சியாக விடுதலை 2ம் பாகம் வருகிற டிசம்பர் 20ம் தேதி வெளியாக உள்ளது.

இதையொட்டி விடுதலை 2 படத்தின் இசை வெளியீட்டு சென்னையில் நேற்று நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்றார். நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, நடிகை பவானி ஸ்ரீ, இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக்கொண்டனர்.

- Advertisement -

விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் பேசியதாவது, விடுதலை 2 படத்தின் பின்னணி இசையை கேட்க ஆவலாக காத்திருக்கிறேன். இளையராஜா எப்படி அதை தரப்போகிறார் என்பதை தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். இந்த படத்தின் ஷூட்டிங் 257 நாட்கள் நடந்துள்ளது. இது ஒரு சவாலான விஷயம்.

ஷூட்டிங் நிறைவு நாளில் கூட, நான் படப்பிடிப்பை நிறுத்திக்கொள்கிறேன் என்றுதான் சொன்னேனே தவிர, படப்பிடிப்பை முடிக்கிறேன் என்று சொல்லவில்லை. ஏனென்றால் படம் இன்னமும் முடியவில்லை. இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கிறது.

- Advertisement -

மற்றவர்களை பொருத்த வரை 257 நாட்கள் விடுதலை 2 படப்பிடிப்பு நடந்தது டைம் மட்டும்தான். ஆனால் தயாரிப்பாளருக்கு டைம், பணம், வட்டி என அந்த விஷயங்களும் சேர்ந்து இருக்கிறது. தயாரிப்பாளரும் இந்த படத்துடன் தொடர்ந்து பயணித்து நிறைய கற்றுக்கொண்டும், மாற்றங்கள் செய்துகொண்டும் வந்திருக்கிறார்.

இந்த விழாவில் மஞ்சுவாரியார் பற்றி யாருமே பேசவில்லை. அவர் இந்த நிகழ்ச்சிக்கு வராததால், அவரை பற்றி யாரும் பேசவில்லை. அசுரன் படத்துக்கு பிறகு இந்த படத்தில் அவர் நடித்துள்ளார். அவர் இதில் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். ஒரு கேரக்டருக்கு அவர் தருகிற லைப் ரொம்பவும் சிறப்பானது. இந்த ரோல் ரொம்பவும் ஸ்பெஷல்தான் என்று கூறினார். ஷூட்டிங் இன்னும் முடியவில்லை என்று விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் பேசியிருப்பதால், வரும் டிசம்பர் 20ம் தேதி படம் ரிலீஸாகுமா என்ற குழப்பம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்