- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னை ரொம்ப பழசுன்னு அந்த டைரக்டர் சொல்லிட்டார், படத்துல நடிக்கவும் வாய்ப்பு தரலே -...

என்னை ரொம்ப பழசுன்னு அந்த டைரக்டர் சொல்லிட்டார், படத்துல நடிக்கவும் வாய்ப்பு தரலே – கசப்பான அனுபவத்தை வெளிப்படையாக சொன்ன நடிகர் வையாபுரி!

- Advertisement -

கடந்த 1990களில் வெளியான ஏராளமான தமிழ் படங்களில் காமெடி ரோலில் நடித்தவர் நடிகர் வையாபுரி. ஒல்லியான அவரது தேகமும் காமெடியான அவரது நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கமல் விஜய் அஜீத்குமார் கார்த்திக் என முன்னணி நட்சத்திர ஹீரோக்களின் படங்களில் வையாபுரி நடித்திருக்கிறார்.

ஒருமுறை பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் வையாபுரி கலந்துக்கொண்டார். நடிகர்கள் அஜீத்குமார் விஜய் போன்றவர்களின் ஆரம்ப கால படங்களில் அவர்களது நண்பர் குழுவில் ஒருவராக கண்டிப்பாக நடிகர் வையாபுரியும் இருந்திருக்கிறார். ஆனால் இப்போது இவரை போன்ற துணை நடிகர்களுக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் வையாபுரி கூறியதாவது, நான் ஏன் இன்ஸ்டாகிராமில் சேர்ந்தேன் என்றால் ஒரு பெரிய புரொடக்‌ஷன் மேனேஜர் டைரக்டரைப் பார்ப்பதற்காக என்னை ஆபீஸூக்குக் கூப்பிட்டிருந்தார். ஆனால் அந்த டைரக்டரோ, அவரு பழைய ஆர்டிஸ்ட். நான் இல்லைன்னு சொல்லிடுங்கனு என்று என்னை வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.

அது எனக்கு ரொம்ப சங்கடமா இருந்துச்சு. அந்த மேனேஜர் வெளிய வந்ததும் என்னிடம், டைரக்டருக்கு உங்கள பார்க்க விருப்பமில்லையாம் என்று சொன்னார். அப்போது இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்ல இருந்து நெறைய பேர் புதுசு புதுசா வர்றாங்க. இவர் ரொம்ப பழசுனு சொல்லியிருக்கார்.

இது என் மனசை ரொம்பவும் பாதிச்சுருச்சு. அதுக்குப் பிறகுதான் நாம ஏன் இன்ஸ்டாகிராம் ஆரம்பிக்கக்கூடாதுன்னு தான் ஆரம்பிச்சேன். புது டைரக்டர்களுக்கு இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் பிடிச்சுருக்கு. அதுக்காக அவங்களுக்கு நியாபகப்படுத்தறதுக்காவது அனுபவத்தை ஷேர் பண்ணிக்கலாம்ன்னு தான் ஆரம்பிச்சேன்.

இந்த ஒரு மாசத்துல எவ்வளவு பேர் என் மேல அன்பு வெச்சுருக்கீங்கன்னு தெரிஞ்சுது. இது போதும் எனக்கு என்று அந்த நேர்காணலில் நடிகர் வையாபுரி கூறியிருக்கிறார். இன்ஸ்டாகிராமில் இருந்தால் மட்டுமே இன்றுள்ள சூழலில் துணை நடிகர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதையும் அவர் சூசகமாக சுட்டிக்காட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்