- Advertisement -
Homeபொழுதுபோக்குமகாராஜா படத்திற்காக இப்படியொரு விஷயம் செய்தாரா விஜய் சேதுபதி... சம்பளம் கூட வாங்காமல் நடித்ததாக கூறும்...

மகாராஜா படத்திற்காக இப்படியொரு விஷயம் செய்தாரா விஜய் சேதுபதி… சம்பளம் கூட வாங்காமல் நடித்ததாக கூறும் சினிமா விமர்சகர்கள்… ஆனால் உண்மை என்ன தெரியுமா…

- Advertisement -

தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதிக்கு நாயகனாகும் வாய்ப்பு தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் கிடைத்தது. சீனு ராமசாமி இயக்கியிருந்த அந்த திரைப்படம், விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. பின்னர் வெளியான பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பலராலும் அறியப்பட்டார் விஜய்சேதுபதி.

 

- Advertisement -

தொடர்ந்து நானும் ரவுடிதான், தர்மதுரை என முத்தான திரைப்படங்கள் அவருக்கு அமைய தற்போது முக்கிய ஹீரோக்களில் ஒருவராக விஜய் சேதுபதி வலம் வருகிறார். அவரது 25ஆவது திரைப்படமாக எடுக்கப்பட்ட சீதக்காதி அந்தளவுக்கு வரவேற்பை பெறவில்லை. சொல்லப்போனால் அது படுதோல்வியை சந்தித்தது. இதனால் தனது 50ஆவது படத்திற்கான தேர்வில் மிக கவனமாக இருந்தார் நாயகன்.

 

- Advertisement -

அவர் எதிர்பார்த்தது போலவே 50ஆவது திரைப்படமான மகாராஜா வெற்றி படமாக அமைந்தது. குரங்கு பொம்மை படத்தின் மூலம் பலராலும் கவனிக்கப்பட்ட நித்திலன் சுவாமிநாதன்தான் இந்த படத்தை எடுத்திருந்தார். நட்டி, மம்தா, அபிராமி, சிங்கம்புலி, அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன், திவ்யபாரதி என படத்தில் நடித்திருந்த பலரும் தங்கள் சிறப்பான பங்களிப்பை கொடுத்தனர். அதிலும் சிங்கம்புலி நடிப்பில் அசத்தியிருந்தார்.

 

சாதாரண கதைதான் என்றாலும் அதனை நான் லீனியராக வகையில் பிரமாதமாக கூறி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன்பக்கம் திருப்பினார் நித்திலன் சுவாமிநாதன். கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் கவனத்தை ஈர்த்தது மகாராஜா. தற்போது ஓடிடியில் வெளியாகி பரபரப்பாக பேசப்படும் மகாராஜா படம், இந்தியில் ரீமேக்காக இருக்கிறது.

 

பிரபல தயாரிப்பு நிறுவனம் இதன் உரிமையை பெற்றிருப்பதாகவும், அமீர்கான் படத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி இந்திய திரையுலகமே திரும்பி பார்க்க வைத்திருக்கும் மகாராஜா திரைப்படம், வெறும் 20 கோடி ரூபாயில்தான் தயாராகி இருக்கிறது. ஆனால் படம் வசூல் செய்தது என்னமோ 100 கோடி ரூபாய்க்கும் மேல். இந்த படத்திற்காக விஜய் சேதுபதி ஊதியம் ஏதும் பெறாமல் நடித்திருக்கிறாராம்.

 

படத்திற்கான செலவை குறைப்பதற்காகவே இந்த முடிவு எடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி. அதேசமயம் யாரும் எதிர்பார்க்காத வகையில் மகாராஜா பிரமாண்டமான வெற்றியை ருசிக்க, தற்போது அதன் லாபத்தின் ஒரு பகுதியை விஜய் சேதுபதி எடுத்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே விஜய் சேதுபதி அடுத்ததாக ஏஸ் எனும் படத்தில் நடித்து வருகிறார். இதைப் போலவே மிஷ்கின் இயக்கத்தில் அவர் நடித்துள்ள டிரைன் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது

- Advertisement -

சற்று முன்