- Advertisement -
Homeபொழுதுபோக்குசட்டசபையில் மிசா குறித்து சைகை காட்டி சர்ச்சையில் சிக்கிய முதல்வர் விஜய், அது ஏதேச்சையாக தான்...

சட்டசபையில் மிசா குறித்து சைகை காட்டி சர்ச்சையில் சிக்கிய முதல்வர் விஜய், அது ஏதேச்சையாக தான் நடந்ததாம் – அவரே தந்த திடீர் விளக்கம்!

- Advertisement -

பதவி வரும்போது பணிவு வர வேண்டும் துணிவு வர வேண்டும் தோழா, பாதை தவறாமல் பண்பு குறையாமல் பழகி வர வேண்டும் தோழா என்று பாடியவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். அதை திரையில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் தவறாமல் கடைபிடித்தார். அதனால் தான் இன்றும் அவர் பொன்மனச் செம்மலாக போற்றப்படுகிறார்.

நடிகர் விஜய் அதிக பட்சமாக சம்பளம் வாங்கும் ஒரு நட்சத்திர நடிகராக இருந்தாரே தவிர நடிப்பில் விஜய் போல ஒருவர் உண்டா என்று போற்றுகிற அளவுக்கு நடிப்பின் சகல பரிமாணங்களையும் வெளிப்படுத்திய ஒரு நடிகர் திலகம் சிவாஜி கணேசனோ, உலக நாயகன் கமல்ஹாசனோ நடிகர் சியான் விக்ரம் போலவே அவர் நடிப்புக்காக எப்போதுமே மெனக்கெட்டது இல்லை.

ஆரம்பகாலத்தில் காதல் கவர்ச்சி நிறைந்த படங்களில் ஐட்டம் பாடல்களுக்கு கவர்ச்சி நடிகைகளுடன் குத்தாட்டம் போட்டார். பிறகு பூவே உனக்காக காதலுக்கு மரியாதை துள்ளாத மனமும் துள்ளும் போன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் ஹீரோவாக நடித்ததால் அவருக்கு ரசிகர்களிடம் நல்ல இமேஜ் கிடைத்தது.

ஆனால் இதே படங்களில் மாதவனோ அப்பாஸோ சூர்யாவே நடித்திருந்தாலும் அந்த படங்கள் மாஸ் ஹிட் படங்களாக தான் ஓடியிருக்கும். விஜய் என்ற ஒரு தனிநபருக்காக ஓடிய படங்கள் இல்லை. எனினும் ஒரு கட்டத்தில் நட்சத்திர நடிகராக ரசிகர்களின் செல்வாக்கை பெற்ற விஜய் இன்று ஒரு அரசியல் கட்சி தலைவராகவும் தமிழகத்தின் மாண்புமிகு முதல்வராகவும் இருக்கிறார்.

ஆனால் கொஞ்சம் கூட அந்த மாண்புக்குரிய தன்மை இல்லாமல் சட்டசபையில் மிசா வழக்கு குறித்து பேசிய போது திமுக தலைவர் ஸ்டாலின் தாடை உடைக்கப்பட்ட சம்பவத்தை நக்கலாக கலாய்க்கும் விதமாக தாடையில் கையால் தட்டிக் காட்டி நையாண்டி செய்தார். இதை பார்த்து திமுக மட்டுமல்ல மற்ற அரசியல் கட்சிகள் கூட, இது முதல்வருக்கு அழகா என்று விமர்சிக்க துவங்கிவிட்டன.

நெட்டிசன்கள் தரப்பிலும் கடும் விமர்சனம் எழுந்த நிலையில் இப்போது முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சட்டமன்றத்தில் காவல்துறை மானிய கோரிக்கையின் போது என்னுடைய பதில் உரையின் இடையேயான எனது உடல் மொழி எதேச்சையாக வெளிப்பட்டது தானே தவிர, அது எந்த வகையிலும் உள்நோக்கம் கொண்டது இல்லை. ஆகவே தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

சற்று முன்