மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. நடிப்பும் திறமையும் அழகும் கொண்ட ஒரு நல்ல நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஐஸ்வர்யா லட்சுமி பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறார்.
பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 மாமன் கட்டா குஸ்தி கட்டா குஸ்தி 2 உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருக்கிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான கட்டாகுஸ்தி 2 படத்தின் அபார வெற்றியால் அவருக்கு தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
இந்த வாரத்தின் இறுதியில் மலையாளத்தில் நடிகை ஊர்வசியுடன் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்த ஆஷா திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற ஐஸ்வர்யா லட்சுமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் துல்கர் சல்மான் உடன் ஜோடியாக நடித்த கிங் ஆஃப் பொத்த படம் குறித்து பேசியிருக்கிறார்.
இந்த படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த போது தான் சந்தித்த கேலி கிண்டல் மற்றும் எதிர்மறை விமர்சனங்கள் தன்னை எந்த அளவுக்கு பாதித்தது என்பது குறித்தும் மனம் திறந்து அவர் பேசியிருக்கிறார். அது பற்றி நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கூறியதாவது, கிங் ஆஃப் கொத்த படத்தில் நான் பேசிய வசனங்கள் குறிப்பாக துல்கர் சல்மானின் கதாபாத்திரத்தை ராஜூ வேட்டா என்று அழைத்தது இணையத்தில் கேலிக்குள்ளானது.
என் நடிப்பு குறித்து அந்த படத்தில் சில விமர்சனங்கள் நியாயமானவை என்றாலும் இன்னொரு படப்பிடிப்பு தளத்தில் ஒரு உதவி இயக்குனரே என்னை ராஜூ வேட்டா என்று அழைத்து கிண்டல் செய்தது மனவேதனையை எனக்குத் தந்தது. அதன் பிறகு நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகளை மறுக்கத் தொடங்கினேன்.
இந்த ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் விதமாக தயாரான ஒரு விளம்பர படத்தில் கூட துல்கர் சல்மானுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் என் மீதான எதிர்மறை விமர்சனங்கள் அந்த விளம்பரப் படத்தை பாதித்து விடக் கூடாது என்பதற்காக அதில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்தேன் என்று நடிகை ஐஸ்வர்யா லட்சுமி அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





