பகத் பாசில் மலையாள சினிமாவின் உச்ச நடிகராக திகழ்ந்து வந்தாலும் தற்போது தமிழிலும் மிக முக்கிய நடிகராக உருவாகியிருக்கிறார். முதலில் “வேலைக்காரன்” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பகத் பாசில், அதனை தொடர்ந்து “சூப்பர் டீலக்ஸ்”, “விக்ரம்” ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்தார். சமீபத்தில் வெளிவந்த “மாமன்னன்” திரைப்படத்தில் அட்டகாசமாக தனது வில்லத்தனத்தை காட்டியிருந்தார்.

“மாமன்னன்” திரைப்படத்தில் ரத்னவேலு என்ற அரசியல்வாதியாக நடித்திருந்தார் பகத் பாசில். அதில் அவருக்கு மனைவியாக நடித்தவர் ரவீனா ரவி. “லவ் டூடே” திரைப்படத்தின் மூலம் மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் ரவீனா ரவி. இந்த நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் பகத் பாசிலுக்கும் ரவீனா ரவிக்கும் இடையே நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை குறித்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது “மாமன்னன்” திரைப்படத்தில் பகத் பாசிலும் ரவீனாவும் கட்டிப்பிடிப்பது போன்று ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது. அந்த காட்சியில் நடிக்கும்போது ரவீனாவின் லிப்ஸ்டிக் தடம் பகத் பாசிலின் சட்டையில் பதிந்துவிட்டதாம். அதை பார்த்த படக்குழுவினர் ரவீனா, பகத் பாசிலுக்கு முத்தம் கொடுத்திவிட்டார் என்று கேலி செய்யத் தொடங்கிவிட்டனராம். இது குறித்து ரவீனா ரவி ஒரு பேட்டியில் பேசியபோது, “பகத் பாசிலுக்கு ஒரு வேளை திருமணம் ஆகவில்லை என்றால் கூட முத்தம் கொடுத்திருப்பேன்” என கலகலப்பாக கூறியுள்ளார்.

ஏற்கனவே பகத் பாசில், ரவீனா ரவியிடம் “மேக்கப் போடுவியா?” என்று கேட்டிருந்தாராம். அதற்கு ரவீனா “இல்லை” என்று கூறியிருந்தாராம். ஏனென்றால் பகத் பாசிலுக்கு மேக்கப் போடுவதே பிடிக்காதாம். இந்த சம்பவத்திற்கு பிறகு “லிப்ஸ்டிக் மட்டும் போடுவியா நீ. அப்போ அன்னைக்கு என்னிடம் பொய் சொன்னியா?” என்று பகத் பாசில் சற்று டென்சனாக கேட்டாராம்.





