- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் டிவி தமிழ் பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெளியேறிய முக்கிய போட்டியாளர்...

விஜய் டிவி தமிழ் பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெளியேறிய முக்கிய போட்டியாளர் – அடடா நல்ல நடிகராச்சே என புலம்பும் ரசிகர்கள்!

- Advertisement -

விஜய் டிவியில் கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பும் ஆதரவும் இருந்து வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை நடிகர் கமல்ஹாசன் இந்த தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிலையில் 2024ம் ஆண்டு முதல் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் மட்டுமின்றி இந்தியில் நடிகர் சல்மான்கான் தொகுப்பாளராகவும் தெலுங்கில் நடிகர் நாகர்ஜூனா மலையாளத்தில் நடிகர் மோகன்லால் கன்னடத்தில் நடிகர் கிச்சா சுதீப் மற்றும் பெங்காலியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் சௌரவ் கங்குலியும் தொகுப்பாளராக பங்கேற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

- Advertisement -

தமிழில் பிக்பாஸ் சீசன் 10ல் மொத்தம் 19 போட்டியாளர்கள் வீட்டுக்குள் கடந்த 6ம் தேதி மாலை சென்றனர். இதில் மொத்தம் 29 போட்டியாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு மேடையிலேயே 10 பேர் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 19 பேர் மட்டுமே பிக்பாஸ் வீட்டுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த முறை காமன் மேன் நிகழ்ச்சியில் இருந்து தேர்வான முனியம்மாள் உள்ளிட்ட 3 பேரும் இந்த பிக்பாஸ் போட்டியாளர்களாக வீட்டுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 3 நாட்களே ஆன நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்த முக்கிய போட்டியாளர்களின் ஒருவரான நடிகர் பிளாக் பாண்டி வெளியேறி விட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அங்காடி தெரு படத்தில் ஹீரோவின் நண்பராக நடித்தவர் பிளாக் பாண்டி. இந்த படம் அவருக்கு நல்ல ஒரு அடையாளத்தை கொடுத்தது. விஜய் டிவியில் சீரியல் ஒன்றில் அறிமுகமான பிளாக் பாண்டி பிறகு சினிமாவில் பல படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக அங்காடி தெரு படம் அவருக்கு நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது.

பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த நடிகர் பிளாக் பாண்டிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவர் இந்த போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. மீண்டும் அவர் உடல் நலம் பெற்று பிக்பாஸ் வீட்டுக்குள் வருவாரா, அல்லது இந்த போட்டியில் இருந்து முற்றிலும் விலகி வெளியேறி சென்றாரா என்பது அடுத்த சில நாட்களில் தெரிய வரும்.

- Advertisement -

சற்று முன்