நடிகர் சூர்யாவுக்கு இந்த 2026ம் ஆண்டு ஒரு வெற்றிகரமான ஆண்டாக மாறி வருகிறது. கடந்த 2012ம் ஆண்டில் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் 2 படத்துக்குப் பிறகு நடிகர் சூர்யாவுக்கு பெரிய வெற்றி படங்கள் எதுவும் அமையவில்லை. 12 ஆண்டுகளாக அவர் நடித்த 10 படங்களும் படுதோல்வி அடைந்தன.
இந்த நிலையில் ஓடிடியில் நேரடியாக வெளியான ஜெய்பீம் மற்றும் சூரரைப் போற்று ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வணிகரீதியான வெற்றி படங்களாக இருந்தன. இந்த 12 ஆண்டுகளில் நடிகர் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் காப்பான் அஞ்சான் 24 பசங்க 2 சிங்கம் 3 தானா சேர்ந்த கூட்டம் மாசு என்கிற மாசிலாமணி என்ஜிகே உள்ளிட்ட படங்கள் எதுவுமே நடிகர் சூர்யாவுக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
குறிப்பாக 2000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்று கூறப்பட்ட கங்குவா படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. மிக மோசமான விமர்சனங்களையும் எதிர்கொண்டது. இந்த நிலையில் நடிகர் சூர்யாவுக்கு நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான கருப்பு படம் மிகப்பெரிய சூப்பர் கம்பேக் தந்தது. இந்த படம் 340 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்தது.
இந்த படத்தில் சூர்யா திரிசா ஆர்ஜே பாலாஜி லப்பர் பந்து நடிகை சுவாசிகா ஷிவதா மலையாள நடிகர் இந்திரன்ஸ் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பெரிய அளவில் வசூல் வேட்டை செய்தது. இந்த படத்தின் அபார வெற்றியை தொடர்ந்து சூர்யா நடித்த விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் படம் கடந்த மாதம் வெளியானது.
லக்கி பாஸ்கர் படத்தின் மூலம் பெரிய வரவேற்பு பெற்ற தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி வெளியானது. இதில் நடிகை மமிதா பைஜூ ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். சித்தாரா என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்த இந்த படம் 260 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை எட்டியது.
தற்போது விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. வருகிற 11ம் தேதி அதாவது நாளை மறுதினம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது. இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





