சமீபமாக நடிகர் அஜீத்குமார் முதல்வர் விஜய் இடையே அதிகமான நெருக்கம் காணப்படுகிறது. லண்டனில் நடந்து வரும் அஜீத்குமார் பங்கேற்ற கார் ரேஸ் போட்டியை முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் இருவரும் கட்டியணைத்து அன்பு பாராட்டி ஒருவருடன் ஒருவர் அதீத நட்புடன் இருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறியதாவது, விஜய் அஜீத் திடீர் நெருக்கத்துக்கு பின்னால் ஒரு கணக்கு இருக்கு. எதுவும் தற்செயலாக நடக்கலே. எல்லாமே பிளான்படி தான் நடக்குது. விஜய் லண்டன் போறது, கார் ரேஸை துவங்கி வைக்க விஜயை அஜீத் அழைப்பது எல்லாமே ஏனோதானா என்று நடக்கவில்லை.
தமிழ்நாட்டுக்குள் எத்தனையே பிரச்னைகள் இருக்குது. இருக்கிற பிரச்னைகள் என்னான்னு தெரிஞ்சுக்காமல் அதை சரி செய்யாமல் பல கோடி ரூபாய் செலவில் நான் மோட்டார் சிட்டி அமைக்கிறேன் என்று முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவிக்கிறார். இதுக்கு பின்னாலேயும் ஒரு கணக்கு இருக்குது.
மக்கள் ஆதரவு கொடுத்த விஜய் முதல்வர் ஆனாலும் அஜீத்குமார் ரசிகர்களுக்கு விஜய் இப்போதும் பரம எதிரிதான். இன்னும் 100 தேர்தல் வந்தாலும் அஜீத்குமார் ரசிகர்களின் ஒரு ஓட்டு கூட விஜய்க்கு கிடைக்காது. இதுதான் யதார்த்தம். அதனால் அஜீத்குமார் ரசிகர்களின் ஓட்டுகளை பெற வேண்டும் என்றால் அஜீத்குமாருடன் நெருக்கமான நட்பில் இருக்க வேண்டும் என்று விஜய் நினைக்கிறார்.
தமிழ்நாட்டில் மோட்டார் சிட்டி அமைக்கும் இந்த திட்டம் கூட அஜீத்குமாரின் யோசனையாக தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இப்படி எல்லாம் செய்து அஜீத் ரசிகர்களை தன்பக்கம் இழுக்க விஜய் திட்டம் போடுகிறார். அதே போல் அஜீத்குமாருக்கு இப்போது சினிமாவில் மார்க்கெட் இல்லை. அவர் படங்களை எடுத்த தயாரிப்பாளர்கள் எல்லாரும் நஷ்டமடைந்து வருகின்றனர்.
அதனால் விஜயுடன் நாம் நெருக்கமான பழகினால் விஜய் ரசிகர்கள் எல்லாம் தன் படத்துக்கு ஆதரவு தருவார்கள். தன்னுடைய படங்கள் லாபத்தை தரும் என்று கணக்கு போடுகிறார். தேர்தலில் ஓட்டுக்காக விஜயும் சினிமா லாபத்துக்காக அஜீத்குமாரும் இப்போது இப்படி நெருக்கமாக பழகி வருகின்றனர். இப்படி 2 பேருமே கணக்கு போட்டு இப்படி செய்து வருகின்றனர் என்று அந்த நேர்காணலில் ஜெ பிஸ்மி கூறியிருக்கிறார்.





