- Advertisement -
Homeபொழுதுபோக்குநடுநிலையான ஒரு பொதுஜனமாக தன் கருத்தை வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய் சேதுபதி - மத்த...

நடுநிலையான ஒரு பொதுஜனமாக தன் கருத்தை வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய் சேதுபதி – மத்த ஹீரோக்களும் இப்படி ஓபனா ஸ்டேட்மென்ட் தருவாங்களா?

- Advertisement -

நிஜ வாழ்க்கையில் சினிமா படப்பிடிப்புகளில் ஒன்றுமே தெரியாத அப்பாவி போல அமைதியாக இருந்து விட்டு இப்போது அரசியல் களத்துக்கு வந்து முதல்வராகி இருக்கிறார் விஜய். இவர் அரசியலுக்கு வருகிறாரா? என்று அவருடன் நடித்த நடிகர் நடிகைகள் பலரும் ஆச்சரியமாக தான் முதலில் பேசியிருக்கிறார்கள்.

ஏனென்றால் சினிமா படப்பிடிப்புகளில் விஜயின் நிஜத்தை பார்த்த அவர்கள், கேமரா முன்புதான் நடிப்பு டான்ஸ் என்று அவர் அசத்துவார். நிஜத்தில் அவர் மிக அமைதியானவர். ஷாட் பிரேக் நேரத்தில் கூட சுவத்தை பார்த்து சேர் போட்டு அமர்ந்துக்கொள்வார் என்று நடிகை ரோஜா கூட சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியிருந்தார்.

- Advertisement -

இப்போது முதல்வராக உள்ள நிலையிலும் விஜயின் செயல்பாடு அப்படிதான் இருக்கிறது. சட்டசபையில் ஏதோ வேடிக்கை பார்க்க வந்தவரை போல அமைதியாக பார்த்துக்கொண்டே அமர்ந்திருப்பார். பிறகு 3 நாட்கள் அவகாசம் வாங்கிக் கொண்டு ஸ்கிரிப்ட் பேப்பர்களை கையில் வைத்துக்கொண்டு அப்படியே ஆவேசமாக கத்தி பேசி ஆர்ப்பாட்டம் செய்வதும் அவரது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில் முதல்வர் விஜய் குறித்து கடுமையான விமர்சனங்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. மக்கள் பணத்தில் ஒரு பைசா தொட மாட்டோம் என்றவர், 15 பேருடன் லண்டன் பயணம் செய்து நடிகை திரிஷாவுடன் கார் ரேஸ்சை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார். இதில் ஒரு நபர் தங்கும் ஓட்டல் அறை வாடகை மட்டும் 2.5 லட்சம் ரூபாய் என்கின்றனர்.

- Advertisement -

இப்படிப்பட்ட ஒரு சூழலில் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, லீடர்ன்னா என்னன்னே தெரியாம லீடர் ஷிப்புன்னா என்னன்னே தெரியாம வாய்க்கு வந்த மாதிரி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துட்டு பிரச்னைகளும் பொறுப்பும் வரும்போது எதிரணி மேல பழியை தூக்கிப் போட்டுட்டு இல்லே அங்க தெறிச்சு ஓடறதுங்கறது லீடருக்கான குவாலிட்டி இல்லே. அது ஏமாற்றுவேலை என்று ஓபனாக பேசியிருக்கிறார்.

இது ஒரு பொதுஜனமாக தமிழக மக்களின் குரலாக பிக்பாஸ் மேடையில் ஒலித்திருக்கிறது. இது விஜய் ரசிகர்களுக்கும் டிவிகே கட்சியினருக்கும் எரிச்சலை ஏற்படுத்தும். தனது படங்களை அது பாதிக்கும் என்றாலும் சிறிதும் கவலைப்படாமல் ஒரு குடிமகனாக தன் கருத்தை பொதுவெளியில் வைத்துள்ள விஜய் சேதுபதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மற்ற ஹீரோக்களின் விஜயின் ஆட்சி குறித்து அவலங்களை இப்படி வெளிப்படையாக பேச முன்வர வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்