தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் கே பாக்யராஜ். பெரும்பாலும் அவரது இயக்கத்தில் உருவாகும் படங்களில் அவரே ஹீரோவாக நடித்து விடுவார். கொஞ்சம் அப்பாவியாகவும் அதே நேரத்தில் அப்பாவியான மனிதராகவும் அவரது நடிப்பு வெகு எளிதாக ரசிகர்களின் மனங்களை வென்றுவிடும்.
அதற்கேற்ப திரைக்கதை அமைப்பதில் அவர் கில்லாடி என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதனால் தான் இந்திய அளவில் அவர் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்று கொண்டாடப்படுகிறார். இயக்குனர் கே பாக்யராஜ் இயக்கி நடித்து கடந்த 1985ம் ஆண்டு நவம்பரில் வெளியான படம் சின்ன வீடு.
இந்த படத்தில் உடல் பருமனாக உள்ள மனைவியை பிடிக்காமல் அழகான ஒரு இளம்பெண்ணிடம் ஹீரோ தவறான தொடர்பு வைத்துக்கொள்வதுதான் இந்த படத்தின் மையக்கதை. இந்த படத்தில் பெண் சபலம் கொண்ட ஒரு கேரக்டரில் கே பாக்யராஜ் நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குனர் நடிகர் கே பாக்யராஜிடம் நீங்க நடிச்ச சின்னவீடு படத்தில் இப்போது எந்த ஹீரோ நடித்தால் பொருத்தமாக இருப்பார் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கே பாக்யராஜ் கூறியதாவது, சின்னவீடு படத்தில் இப்போது இருக்கிற விஜய் அஜீத் சூர்யா விக்ரம் தனுஷ் என்று யார் நடிச்சாலும் அது சரியாக வராது.
சின்னவீடு அப்படின்னாலே கொஞ்சம் அப்படி இப்படி சபலமாக இருக்கிற ஆள் மாதிரி அது கொஞ்சம் விளையாட்டுதனமா இருக்கும். நான் அதுக்கு சிம்பு பெட்டர்ன்னு நினைக்கிறேன். நான் வேற மீனிங்கில் சொல்லவில்லை. யதார்த்தமாக சொல்கிறேன்.
அந்த கேரக்டர் வந்து விளையாட்டுத்தனமா நான் பண்ணின மாதிரி தப்பு தண்டா பண்றதுக்கு எல்லாம் அவர் பண்ற கேரக்டர் கரெக்டா இருக்கும். அதனால் சொல்றேன். சின்னவீடுன்னு நான் சொன்ன உடனே ஆஹான்னு நீ கைதட்டறதை நெனைச்சிக்கிட்டு நான் அதை மனசுல வெச்சுட்டு சொன்னேன்னு, இதுதான் வலிய போய் வம்புல மாட்டிக்கிறது என்று கே பாக்யராஜ் ஜாலியாக அந்த நேர்காணலில் பேசியிருக்கிறார்.





