- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜித்தை வைத்து தனுஷ் இயக்குவது உண்மையா?... முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக வெளிவந்த தகவல்...

அஜித்தை வைத்து தனுஷ் இயக்குவது உண்மையா?… முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக வெளிவந்த தகவல்…

- Advertisement -

விடாமுயற்சி திரைப்படத்தை தொடர்ந்து அஜித்திற்கு அடுத்ததாக குட் பேட் அக்லி படம் திரையரங்குகளில் வரும் பத்தாம் தேதி வெளியாகிறது. இதில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். பிரசன்னா அர்ஜுன் தாஸ் பிரபு யோகி பாபு உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்று இருக்கிறார்கள்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தை, மைத்திரி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் அஜித்தின் மகனாக கார்த்திகேயா தேவ் என்பவர் நடித்திருக்கிறார். இவர் ஏற்கனவே பிரபாஸ் நடித்திருந்த சலார் படத்தில் வந்திருந்தார்.

தந்தைக்கு மகனுக்குமான பாச போராட்டம் தான் இந்த திரைப்படத்தின் கதை என்று கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, குட் பேட் அக்லி திரைப்படத்துடன் தனுஷின் இட்லி கடை திரைப்படமும் வெளியாவதாக இருந்தது. இது நடிகரின் இயக்கத்தில் நான்காவது திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

நித்யா மேனன் இதில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். ராஜ்கிரனும் படத்தில் இடம்பெற்று இருக்க அருண் விஜய்க்கு வில்லன் கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த திரைப்படம் திட்டமிட்டபடி ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இன்னும் 10 சதவீத படப்பிடிப்பு நடைபெற இருக்கிறதாம். அது நிறைவடைந்த பிறகு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

இதன் நடுவே அண்மையில் நடிகர் தனுஷ், அஜித்தை சந்தித்து கதை ஒன்றைக் கூறியதாக கூறப்பட்டது. வெறும் ஒன் லைன்னை மட்டும்தான் அவர் கூறியதாகவும், அது அஜித்திற்கு பிடித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் அஜித் தற்போது கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வரும் சூழலில், அவர் மீண்டும் சென்னைக்கு திரும்பிய பிறகு தனுஷ் முழு கதையை தெரிவிப்பார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது.

இப்படியான சூழலில் அந்த தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன். தங்கள் நிறுவனத்தின் கீழ் அஜித் நடிப்பில் தனுஷ் இயக்கும் திரைப்படத்திற்கான பேச்சு தொடங்கி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் இது ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். அதேசமயம், லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் உடன் தனுஷ் இணையும் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்றும் ஆகாஷ் பாஸ்கரன் கூறியுள்ளார்.

சற்று முன்