- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்பார்ன்னு பார்த்தால், இப்படி விஜய் டிவி வெச்சு செஞ்சிருச்சே? -...

நடிகர் விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்பார்ன்னு பார்த்தால், இப்படி விஜய் டிவி வெச்சு செஞ்சிருச்சே? – விஜய் கட்சியினருக்கு இப்படியும் ஒரு ஏமாற்றமா?

- Advertisement -

விஜய் டிவியில் தமிழ் பிக்பாஸ் சீசன் 10 கடந்த 6ம் தேதி துவங்கி தொடர்ந்து ஒரு வாரமாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சனிக்கிழமை அன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய தொகுப்பாளர் நடிகர் விஜய் சேதுபதி லீடர்ஷிப் குறித்தும் நாற்காலி பதவி ஆசை குறித்தும் பல்வேறு கருத்துகளை பேசியிருந்தார். ஆனால் அவர் தவெக என்றோ விஜய் என்றோ குறிப்பிட்டு பேசவில்லை.

பிக்பாஸ் வீட்டுக்குள் ஜனநாயகம் என்ற கான்செப்ட்டில் நடந்து வரும் போட்டியில் வீட்டுக்குள் உள்ள போட்டியாளர்கள் எப்படி நடந்துக் கொண்டார்கள், எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை தான் அவர் தொகுப்பாளராக விளக்கிப் பேசினார். ஆனால் அவர் கூறிய அனைத்து கருத்துகளும் விஜய்க்கு பொருந்துவதால், விஜயை பேசியதாக தவெகவினர் கொந்தளித்து விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

இதுகுறித்து விஜய் டிவி நிர்வாகம் அளித்துள்ள அதிகாரபூர்வமான ஒரு அறிவிப்பில் விளக்கம் தெரிவித்துள்ளது. அந்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது, பிக்பாஸ் தமிழ் சீசன் 10 என்பது அதன் வழக்கமான வடிவம் தீம் மற்றும் விளையாட்டுச் சூழலுக்குள் வழங்கப்படும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சியில் இடம்பெறும் சூழ்நிலைகள் உரையாடல்கள் கருத்துக்கள் மற்றும் தொடர்புகள் அனைத்தும் நிகழ்ச்சியின் கதைக்களத்தின் ஒரு பகுதியாகும்.

அவை நிகழ்ச்சிக்கு உட்பட்ட சூழலிலேயே புரிந்து கொள்ளப்பட வேண்டும். இந்நிகழ்ச்சியில் குறிப்பிடப்படப்படும் எந்த ஒரு வெளிப்பாடோ அல்லது கருத்தோ நிகழ்ச்சிக்கு வெளியில் உள்ள எந்த ஒரு தனிநபரையோ அமைப்பையோ நிறுவனத்தையோ கருத்தியலையோ அல்லது சூழ்நிலையையோ பிரதிநிதித்துவப்படுத்துவதாகவோ ஆதரிப்பதாகவோ அல்லது விமர்சிப்பதாகவோ எடுத்துக் கொள்ளக் கூடாது.

- Advertisement -

இந்நிகழ்ச்சியில் பொழுதுபோக்கு நோக்கத்தை தாண்டி வேறு எந்த வகையிலும் செய்யப்படும் விளக்கங்களோ அல்லது ஒப்பீடுகளோ நிகழ்ச்சி குழுவினரால் நோக்கம் கொள்ளப்பட்டதும் அல்ல, ஆதரிக்கப்படுவதும் இல்லை என்று விஜய் டிவி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள் பிக்பாஸ் நிகழ்ச்சி சார்ந்தது மட்டுமே என்று தெளிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே விஜய் சேதுபதி டிவிகே பற்றியோ விஜய் பற்றியோ குறிப்பிடாத நிலையில் அவர் பேசியது எல்லாம் எங்களுக்கே சொந்தம் என்று தவெகவினர் தானாக முன்வந்து ஒத்துக்கொள்வதும் கேலிக்குரியதாக மாறியிருக்கிறது. இந்த சூழலில் விஜய் சேதுபதி, மன்னிப்பு கேட்பார் என்று எதிர்பார்த்த தவெகவினருக்கு, விஜய் டிவி தந்த விளக்கம் பார்த்து அப்செட்டில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்