- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் தவெக அரசு - இதைக்கூட கவனிக்க மாட்டீங்களா? - விஜய்...

மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் தவெக அரசு – இதைக்கூட கவனிக்க மாட்டீங்களா? – விஜய் ஆட்சியை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

- Advertisement -

ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் திரும்பிய பக்கம் எல்லாம் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் சந்தித்து வருவது தவெக அரசுதான். குறிப்பாக முதல்வர் விஜய் குறித்தும் தவெக அமைச்சர்கள் குறித்தும் தவெக எம்எல்ஏக்கள் குறித்தும் மக்கள் மத்தியில் தொடர்ந்து கடும் விமர்சனங்களும் சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன.

சமீபத்தில் மதுரையில் நடந்த மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவிலும் பக்தர்களை அனுமதிக்காமல், விஐபி பாஸ் விவிஐபி பாஸ் என டோக்கன் அச்சிட்டு ரூ. 4 ஆயிரம் ரூ. 3 ஆயிரம் என விற்பனை செய்யப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. கும்பாபிஷேகம் பார்க்க மதுரை மக்கள் எல்லாம் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

- Advertisement -

மேலும் கோவில் பகுதியில் மணிக்கணக்கில் காத்திருந்த மக்களுக்கு ட்ரோனில் கும்பாபிஷேக நீர் தெளிப்பதற்கு பதிலாக பைப்பில் குடிதண்ணீரை பிடித்து டம்ளரில் போலீசார் மக்கள் மீது வீசி தெளித்து விட்டுள்ளனர். இதைப் பார்த்து ஆவேசமடைந்த பக்தர்கள், விசிலுக்கு ஓட்டுப் போட்டதற்கா இந்த தண்டனை என்றும் பேசிய வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் வருகிற அக்டோபர் 2ம் தேதி சுதந்திர தினம் வருகிறது. அந்த நாளில் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு சென்னையில் இருந்து சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது. அதாவது காந்தி ஜெயந்தி தினத்தை சுதந்திர தினம் என்று குறிப்பிட்டு அந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

- Advertisement -

கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில், வருகிற அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி தினம். அதைக்கூட சரியாக கவனிக்காமல் இப்படி மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு தவறான தகவலுடன் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதைக் கூட அதிகாரிகள் சரியாக கவனித்து அனுப்ப மாட்டார்களா? என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

ஏற்கனவே தமிழக சட்டசபையில் தவெக அமைச்சர்களும் தவெக எம்எல்ஏக்களும் தப்பு தப்பாக வாசித்து தமிழின் மொழியின் பெருமையை சிதைத்து வருகின்றனர். ஒரு எம்எல்ஏ மன்மத நன்றி என்கிறார். ஒரு எம்எல்ஏ, மதுரை காமராஜர் பல்கலை கழகத்தை அரசு கல்லூரியாக மாற்ற வேண்டும் என்கிறார். கர்மவீரர் காமராஜரை காமவீரர் காமரஜர் என்று ஒரு எம்எல்ஏ வாசிக்கிறார். இத்தனை சர்ச்சைகளுக்கு மத்தியில் காந்தி ஜெயந்தி தினத்தை சுதந்திர தினம் என்று குறிப்பிட்டு சுற்றறிக்கை வெளியானதும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்