- Advertisement -
Homeபொழுதுபோக்குமறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சொந்தமான சொத்து சென்னையில் உள்ளதா? - இந்த விவகாரத்தில் டெல்லி சுப்ரீம்...

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சொந்தமான சொத்து சென்னையில் உள்ளதா? – இந்த விவகாரத்தில் டெல்லி சுப்ரீம் கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு!

- Advertisement -

தமிழ் மற்றும் தெலுங்கு இந்தி உள்ளிட்ட படங்களில் ஏராளமாக நடித்தவர் நடிகை ஸ்ரீதேவி. குறிப்பாக 1980களில் தமிழில் அவர் பல படங்களில் நடித்தார். குறிப்பாக ரஜினி கமல் உள்ளிட்டோருடன் ஸ்ரீதேவி நடித்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. தெலுங்கு தொடர்ந்து இந்தியிலும் ஸ்ரீதேவி நட்சத்திர நடிகையாக இருந்தார்.

இந்த நிலையில் அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பை ஓட்டல் ஒன்றில் மர்மமான முறையில் பாத்ரூம் பாத்டப்பில் இறந்து கிடந்தார். எனினும் அவர் மறைவு இயற்கையான மரணம் என்று போலீஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சொந்தமாக சென்னையில் சொத்து உள்ளது.

- Advertisement -

இந்த சொத்து தொடர்பாக நீண்ட காலமாக வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. இதுகுறித்து திரைப்பட தயாரிப்பாளர் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மற்றும் ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி கபூர் குஷி கபூர் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த பிரச்சனை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 2.7 ஏக்கர் நிலம் சார்ந்தது.

இந்த சொத்தை ஸ்ரீதேவியும் அவரது குடும்பத்தினரும் கடந்த 1988ம் ஆண்டில் வாங்கியுள்ளனர். அந்த நிலம் தங்கள் பூர்வீக சொத்து என்றும் தங்களின் உரிமைகள் புறக்கணிக்கப்பட்டு விற்பனை பத்திரம் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறி இரண்டு சகோதரர்கள் அந்த விற்பனையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். முன்னதாக இந்த வழக்கை தாக்கல் செய்வதில் ஏற்பட்ட காலதாமதத்தை சுட்டிக்காட்டியும் இது தேவையற்ற வழக்கு என்றும் கூறி சென்னை உயர்நீதிமன்றம் அவர்களின் மனுவை தள்ளுபடி செய்தது.

- Advertisement -

இதைத் தொடர்ந்து அந்த மனுதாரர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகினார்கள். தற்போது உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. சொத்தில் உரிமை மாற்றம் மற்றும் கட்டுமான பணிகள் தொடர்பாக தற்போது உள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினருக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள அடுத்த விசாரணைக்கு முன்னதாக மத்தியஸ்தம் மூலம் தீர்வு காண முயற்சிக்குமாறு இரு தரப்பினரையும் நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.

இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் உடன்பாட்டை எட்டாவிட்டால் இந்த பிரச்சனைக்கு சட்டபூர்வ நடவடிக்கை மூலமாகவே தீர்மானிக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 2.7 ஏக்கர் நிலம் சொத்து, யாருக்கு சொந்தம் என்பதை சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும் முன்பாக, மத்தியஸ்தம் செய்து இதற்கான தீர்வை எட்டுமாறும் இரு தரப்பினருக்கும் டெல்லி உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்