- Advertisement -
Homeபொழுதுபோக்குஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் முதல் தமிழ் படம் - எல்லா புகழும் விஜய் சேதுபதிக்கே -...

ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் முதல் தமிழ் படம் – எல்லா புகழும் விஜய் சேதுபதிக்கே – இந்த நேரத்துல மாஸ் கெத்து காட்டும் மக்கள் செல்வன்!

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி இப்போது இணையத்தில் அதிக கவனம் பெற்ற ஒரு நட்சத்திரமாக மாறியிருக்கிறார். விஜய் டிவியில் தமிழ் பிக்பாஸ் சீசன் 10 இப்போது நடந்து வருகிறது. அதில் லீடர்ன்னா என்ன என்று அவர் கூறிய 20 வினாடிகள் கொண்ட ஒரு கருத்து இப்போது பெரிய அளவில் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இந்த விவகாரத்தில் நடிகர் விஜய் சேதுபதியை இணையத்தில் கடித்து குதறி வரும் தவெக கட்சியினர், விஜய் சேதுபதி கூறிய கருத்துக்கும் விஜய்க்கும் தவெகவுக்கும் எந்த சம்பந்தமும் தொடர்பும் இல்லை என்று விஜய் டிவி நிர்வாகம் கூறிய பிறகும், எதிரணி மீது பழிபோடும் தகுதியில்லாத தலைவர் என்றால் அது விஜயை தான் குறிப்பிடுகிறது என்று தவெகவினரே அதை ஒத்துக்கொண்டு விஜய் சேதுபதியை விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

அதாவது விஜய் சேதுபதியே நான் பேசியது விஜயை அல்ல என்று மறுத்தாலும் இல்லை இல்லை நீங்கள் கூறிய கருத்துகளுக்கு மிக சரியாக பொருந்தும் ஒரே தகுதியற்ற தலைவர் விஜய்தான் என்று தவெக கட்சியினரே தானாக முன்வந்து ஒத்துக் கொள்ளும் அளவுக்கு இந்த கருத்தால் அவர்கள் குழம்பி போயிருக்கின்றனர். இந்த கூத்தைப் பார்த்து அரசியல் விமர்சகர்கள் வாய்விட்டு சிரிக்கின்றனர்.

அதனால் இத்தகைய அரசியல் சூழலில் நடிகர் விஜய் சேதுபதிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கும் கெத்தும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படம், ஹாலிவுட்டில் ஆங்கில படமாக உருவாகிறது. தமிழில் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் மகாராஜா.

- Advertisement -

கடந்த 2024ம் ஆண்டில் விஜய் சேதுபதியின் 50வது படமாக வெளியான இந்த படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. சீன மொழியிலும் இந்த படம் சீனாவில் வெளியாகி வசூலை வாரி குவித்தது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான இந்த படம் பெரிய அளவில் லாபத்தை தந்தது.

இப்போது மகாராஜா படத்தை 2ம் பாகமாக உருவாக்க இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் தயாராகி வரும் நிலையில் மகாராஜா படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுகிறது. ஹாலிவுட் முன்னணி நிறுவனம் இந்த படத்தின் அதற்கான உரிமத்தை ரூ. 15 கோடி விலை கொடுத்து வாங்கியுள்ளது. ஹாலிவுட்டில் முதல் முறையாக ரீமேக் செய்யப்படும் தமிழ் படம் மகாராஜா தான். இதில் விஜய் சேதுபதி நடித்த பார்பர் மகாராஜா கேரக்டரில் ஆங்கில நடிகர் மேத்யூ மெக்கானாகே நடிக்கிறார்.

- Advertisement -

சற்று முன்