சினிமாவை பொருத்த வரை வளர்ந்த நட்சத்திர ஹீரோக்கள் தொடர்ந்து வெற்றி படங்கள் தந்தாலும் தொடர்ந்து தோல்வி படங்கள் தந்தாலும் அவர்கள் ஒரு வெற்றிப் படம் தரும் வரை தான் அவர்கள் மார்கெட் சற்று பின்தங்கியிருக்கும். ஒரு மாஸ் ஹிட் கொடுத்து விட்டால் பழைய இடத்துக்கு வந்து விடுவார்கள்.
அப்படிதான் நடிகர் ரஜினிக்கு ஜெயிலர் படமும் நடிகர் கமலுக்கு விக்ரம் படமும் நடிகர் சூர்யாவுக்கு கருப்பு படமும் சூப்பர் கம்பேக் கொடுத்தது. அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதிக்கு மாஸ் ஹிட் கம்பேக் கொடுத்த படம் மகாராஜா. அதன்பிறகு அவருக்கு தலைவன் தலைவி படமும் ரூ. 100 கோடி வசூலை வாரி வழங்கியது.
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் 7 ஆண்டுகளாக தொடர்ந்து தொகுத்து வழங்கிய தமிழ் பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியை விஜய் டிவியில் கடந்த 2 ஆண்டுகளாக நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இப்போது 3வது ஆண்டில் அவர் சீசன் 10 நிகழ்ச்சியை வழங்கி வருகிறார். கமலை விட நேரடியாக தாக்கிப் பேசும் விஜய் சேதுபதியின் செயல்பாடும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.
இதற்கிடையே கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி லீடர்ன்னா என்னன்னே தெரியாம லீடர் ஷிப்புன்னா என்னன்னே தெரியாம வாய்க்கு வந்த மாதிரி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துட்டு பிரச்னைகளும் பொறுப்பும் வரும்போது எதிரணி மேல பழியை தூக்கிப் போட்டுட்டு இல்லே அங்க தெறிச்சு ஓடறதுங்கறது லீடருக்கான குவாலிட்டி இல்லே. அது ஏமாற்று வேலை என்று பேசியிருந்தார்.
இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானதும் மக்கள் மத்தியில் இது அதிக கவனமும் வரவேற்பும் பெற்றது. இதில் தவெக என்றோ விஜய் என்றோ விஜய் சேதுபதி குறிப்பிட்டு பேசாத நிலையில் அது டிவிகே குறித்தும் விஜய் குறித்தும் பேசியதுதான் என்று தவெகவினர் கடுமையாக எதிர்க்க துவங்கி விட்டனர். விஜய் சேதுபதியை இணையத்தில் வசைபாடி வருகின்றனர்.
இதற்கு தவெக சார்ந்தவர்களே கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், விஜய்க்காக முட்டுக்கொடுக்கும் சில நடிகர் நடிகைகள் யாரும் இதுவரை இதற்கு வாய் திறக்காமல் உள்ளனர். குறிப்பாக அவரது நட்பு வடடத்தில் உள்ளவர்ளே வாய் திறக்காமல் உள்ளனர். இதற்கு காரணம் லண்டனில் திரிஷாவுடன் விஜய் இருந்த வீடியோ வெளியாகி, அவர்களை எல்லாம் வாய் திறக்க விடாமல் தடுத்து விட்டதாக தகவல் கசிந்துள்ளது.





