- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் நடத்தும் இன்றைய அரசியல் அடுத்த தலைமுறைக்கு பெரிய ஆபத்தை விளைவிக்கும் - இயக்குனர் அட்லி...

விஜய் நடத்தும் இன்றைய அரசியல் அடுத்த தலைமுறைக்கு பெரிய ஆபத்தை விளைவிக்கும் – இயக்குனர் அட்லி பேச்சுக்கு பிரபல நடிகர் தந்த நெத்தியடி பதில்!

- Advertisement -

தமிழ்நாட்டில் திமுக அதிமுக அல்லாத ஒரு புதிய அரசியல் மாற்றம் வர வேண்டும். அதற்காக தான் விஜய்க்கு நாங்கள் விசில் சின்னத்துக்கு ஓட்டுப் போட்டோம். ஆனால் எம்ஜிஆர் ஆட்சியை எதிர்பார்த்த எங்களுக்கு 23ம் புலிகேசி ஆட்சியை தான் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். சட்டசபையில் பேசும் அமைச்சர்கள் எம்எல்ஏக்களுக்கு தமிழில் சரியாக பேசக்கூட தெரியவில்லை.

தமிழ் நாட்டில் மின்தட்டுப்பாடு பிரச்னையால் மக்கள் தினமும் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். விலைவாசி உயர்வால் ஏழை எளிய மக்கள் தினமும் திண்டாட்டமடைகின்றனர். ஆனால் விஜய், திரிஷாவுடன் லண்டனில் கார் ரேஸ் பார்த்து சந்தோஷமாக பொழுதை கழிக்கிறார்.

- Advertisement -

இப்படிப்பட்ட ஒரு நிலையில் ஏண்டா விஜய்க்கு ஓட்டுப் போட்டோம் என்று தினமும் வேதனையில் தவித்து வருகிறோம் என்று தொடர்ந்து இணையத்தில் பொதுமக்கள் பேசும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தல் தவெக தோல்வி நிச்சயம் என்று உளவுத்துறை தகவலும் வெளியாகி தவெகவினர் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.

இந்த நிலையிலும் விஜய் குறித்தும் தவெக குறித்தும் புகழ்பாடும் கூட்டம் இன்னமும் சலிக்காமல் அந்த பணியை செவ்வனே செய்து வருகிறது. அந்த வகையில் விஜய் நடித்த 3 படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி, நேற்று நடந்த பத்தா பட விழாவில் வழக்கம் போல விஜய் புகழ் பாடி, இன்றைய இளைய தலைமுறையே 5 வயசு குழந்தை கூட விஜயை பார்த்து அரசியல் கற்றுக்கொள்கிறது என்று பேசியிருந்தார்.

- Advertisement -

இதுகுறித்து பல படங்களில் நடித்துள்ள நடிகர் போஸ் வெங்கட் தனது வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் போஸ் வெங்கட் கூறியிருப்பதாவது, அடுத்த தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டிய அரசியல் சட்டமன்ற நிகழ்வுகள் அறிஞர் அண்ணாவில் ஆரம்பித்து தளபதி மு க ஸ்டாலினில் முடிந்ததாக கருதுகிறேன். இந்த தலைமுறை தவறான அரசியலை கற்றுக் கொள்கிறது.

இது பெரிய சமுதாய சீரழிவை உண்டாக்கும். முதல் கோணல் முற்றிலும் கோணலாகும். பிள்ளைகள் அறிஞர் அண்ணா தந்தை பெரியார் காரல் மார்க்ஸ் லெனின் மாவோ… என இவர்களை படித்து நல்ல புரட்சிகரமான கருத்துக்களை கற்றுக் கொள்ள வேண்டும். இயக்குனர் அட்லி சொல்லும் அரசியல் கற்றல் என்பது அடுத்த தலைமுறைக்கு ஆபத்தையே விளைவிக்கும் என்று நடிகர் போஸ் வெங்கட் அந்த பதிவில் கூறி அட்லிக்கு நெத்தியடி பதில் தந்து இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்