- Advertisement -
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் இயக்குனர் மற்றும் நடிகர் டி ராஜேந்தர் பேசுகையில், இப்போது விஜய் ஆட்சி அமைந்து விட்டது. எதற்கு தோற்றோம் ஏன் தோற்றோம் என்று எதிர்க்கட்சிகள் சிந்தித்து ஆராய்ச்சி பண்றாங்க. தழைத்து ஓங்கிய திராவிட கட்சிகள் ஒடிஞ்சாச்சி, 60 ஆண்டுகால ஆதிபத்தியம் முடிவுக்கு வந்து விட்டது, பொழுது விடிஞ்சாச்சி. கடைசியில் விஜய் ஆட்சி அமைந்து மக்களுக்கு சந்தோஷம் கிடைச்சாச்சு என்று நடிகர் டிராஜேந்தர் பேசியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள், இவரும் தவெக பக்கம் வந்துடுவாரா என்று கலாய்த்து வருகின்றனர்.





