- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் பங்கேற்கும் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொள்ள தொல் திருமாவளவன் மறுப்பு - ஆளுங்கட்சி...

விஜய் பங்கேற்கும் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொள்ள தொல் திருமாவளவன் மறுப்பு – ஆளுங்கட்சி திமுக விரோதத்தை தவிர்க்க நினைக்கிறாரா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிருக்கும் நடிகர் விஜய், தமிழக அரசியலிலும் தன் ஆற்றலை வெளிப்படுத்த தயாராகி விட்டார். மக்களுக்கு சேவை செய்வதே என் லட்சியம் என்ற கொள்கை முழக்கத்துடன் களத்தில் இறங்கி விட்டார். எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதே அவரது லட்சியமாக உள்ளது.

கடந்த அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்த தனது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை வெற்றிக்கரமாக முடித்துக் காட்டிய விஜய், நேற்று அந்த மாநாட்டை சிறப்புற நடத்த உதவிய விவசாயிகளுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும், விழா ஏற்பாட்டாளர்களுக்கும் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விருந்தளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நடிகர் விஜயை பொருத்த வரை, 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று தமிழக முதல்வர் நாற்காலியில் அமர்வதே லட்சியமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் குடும்ப அரசியல் நடத்தும் திமுக தான் தனது எதிரி என்றும் அவர் பகிரங்கமாக அறிவித்துவிட்டார்.

வருகிற சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் இணைந்து பயணிக்க விரும்பும் தமிழக அரசியல் கட்சிகளை ஏற்றுக்கொள்வதாகவும், அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்திலும் பங்கு தருவதாகவும் விஜய் மாநாட்டு மேடையில் பகிரங்கமாக அறிவித்தார். இது தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்த சூழலில் வருகிற டிசம்பர் 6ம் தேதி அம்பேத்கர் நினைவு நாளில் அவரது நூல் வெளியீட்டு விழா, தனியார் அமைப்பு சார்பில் நடக்க உள்ளது. இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், தவெக கட்சித் தலைவர் விஜய் ஆகியோர் பங்கேற்று தொல் திருமாவளவன் நூலை வெளியிட விஜய் பெற்றுக்கொள்வார் என்று தகவல் வெளியானது.

இந்த சூழலில், அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க வாய்ப்பில்லை என, தொல் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். அதனால் ஆளுங்கட்சி திமுகவின் அதிருப்தியை சந்திக்க நேரிடும் என்பதால், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் அவர் தவிர்த்திருப்பது உறுதியாகி விட்டது. எனினும் இந்த விழாவில் விஜய் பங்கேற்பது உறுதியாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்