- Advertisement -
Homeபொழுதுபோக்குடீசருக்கு கிடைத்த படு மோசமான விமர்சனம், அப்செட் ஆன சுந்தர் சி ஐசரி கணேஷ் -...

டீசருக்கு கிடைத்த படு மோசமான விமர்சனம், அப்செட் ஆன சுந்தர் சி ஐசரி கணேஷ் – தீபாவளிக்கு வரவே வேண்டாம் – விலகி ஓடிய நயன்தாரா படம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் பொசிசனில் நீண்டகாலமாக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா. ஆனால் அவரது திருமணத்திற்கு பிறகு அவர் நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. சமீபத்தில் நயன்தாரா நடித்த சில படங்கள் வெளியாகியும் அந்த படங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை.

குறிப்பாக கேஜிஎஃப் நாயகன் யஷ் நடித்த டாக்ஸிக் படமும் இளம் நடிகர் கவின் உடன் நயன்தாரா நடித்த ஹாய் படமும் மிக மோசமான தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவான மூக்குத்தி அம்மன் 2 படத்தை தான் நயன்தாரா மிகப் பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

- Advertisement -

இந்த படம் தன்னுடைய சினிமா பயணத்தில் மீண்டும் சூப்பர் கம்பேக் தரும் என்று அவர் எதிர்பார்த்திருக்கிறார். ஆனால் சமீபத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் டீசர் வெளியாகி மிக மோசமான எதிர்மறை விமர்சனத்தை சந்தித்திருக்கிறது. ஏனென்றால் இந்த படத்தின் சிஜி எனப்படும் தொழில்நுட்ப காட்சிகள் மிகவும் மோசமாக இருந்தன. இந்த படம் கங்குவா 2ம் பாகமா? அரண்மனை 5ம் பாகமா? மூக்குத்தி அம்மன் 2ம் பாகம் போலவே இல்லையே என்று நெகட்டிவ் விமர்சனங்கள் ரசிகர்களிடையே எழுந்தன.

இந்த படத்தின் டீசரை வைத்து ரசிகர்கள் கிண்டல் செய்து ட்ரோல் செய்ததால் மூக்குத்தி அம்மன் 2 படத்தை இப்போதைக்கு வெளியிட வேண்டாம் என்ற முடிவுக்கு இயக்குனர் சுந்தர் சியும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷூம் வந்துள்ளனர். வருகிற தீபாவளிக்கு மூக்குத்தி அம்மன் 2 படத்தை வெளியிட அவர்கள் முடிவு செய்திருந்த நிலையில், இப்போதைக்கு மூக்குத்தி அம்மன் 2ம் பாகம் வந்தால் நிச்சயமாக மிகப்பெரிய ஏமாற்றத்தை தரும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

- Advertisement -

இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் சிஜி ஒர்க் மற்றும் விஎஃப்எக்ஸ் தொழில்நுட்ப பணிகள் விமர்சனத்துக்குரிய காட்சிகள் எல்லாவற்றிலும் திருத்தம் செய்து மீண்டும் ரீ ஷூட் செய்து இந்த படத்தை புதுப்பொலிவுடன் தரவும் முடிவு செய்துள்ளனர். ஏனென்றால் மூக்குத்தி அம்மன் 2 படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்டுள்ளது.

அதனால் இந்த படம் ஒருவேளை தோல்வியை சந்தித்தால் மிகப்பெரிய அளவில் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும். அது மட்டும் இன்றி நடிகை நயன்தாராவுக்கு டாக்ஸிக் ஹாய் படங்களைப் போலவே மூக்குத்தி அம்மன் 2 படமும் தோல்வி படமாக மாறிவிடும். அதனால் தீபாவளி பண்டிகைக்கு மூக்குத்தி அம்மன் 2 படம் ரிலீஸ் இல்லை என்ற தகவல் உறுதியாகி உள்ளது. கிறிஸ்துமஸ் அல்லது பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.

- Advertisement -

சற்று முன்