- Advertisement -
Homeபொழுதுபோக்குகணவன் மனைவி உறவுக்குள் விரிசல் ஏற்படுவது ஏன்? விவகாரத்துகள் அதிகரிக்க இதுதான் காரணம் - நடிகை...

கணவன் மனைவி உறவுக்குள் விரிசல் ஏற்படுவது ஏன்? விவகாரத்துகள் அதிகரிக்க இதுதான் காரணம் – நடிகை காஜல் அகர்வால் தந்த அட்வைஸ்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்தவர் நடிகை காஜல் அகர்வால். நடிகர் விஜயுடன் ஜில்லா துப்பாக்கி போன்ற படங்களில் நடித்த அவர் அஜீத்குமாருடன் விவேகம் படத்திலும் கார்த்தியுடன் நான் மகான் அல்ல ஆல் இல் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். இந்தியிலும் பல படங்களில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை காஜல் அகர்வால் நவீன கால உறவுகள் மற்றும் அதிகரிக்கும் திருமண விவாகரத்து சமூக வலைதளங்களின் தாக்கம் உள்ளிட்டைவே குறித்து நடிகை காஜல் அகர்வால் தனது வெளிப்படையான கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

நேர்காணலில் பேசிய நடிகை காஜல் அகர்வால் கூறியதாவது, சகிப்புத்தன்மை இன்மை மற்றும் அளவுக்கு அதிகமான சமூக வலைதள பயன்பாடு அதிகரித்து வரும் விவாகரத்துகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. பல தம்பதிகள் ஹோட்டல்களுக்கு செல்லும்போது கூட ஒருவருக்கொருவர் பேசிய நேரத்தை செலவிடுவதை விட தங்களது செல்போன்களிலேயே அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.

கணவன் மனைவியாக ஒவ்வொரு வாரமும் இரவு உணவுக்கு வெளியே சென்று தரமான நேரத்தை ஒன்றாக ஒற்றுமையாக செலவிடுவதை ஒரு வழக்கமாகவே வைத்திருக்கின்றனர். நானும் என் கணவரும் அப்படித்தான் ஒருவருக்கு ஒருவர் நேரத்தை ஒன்றாக செலவிட்டு வருகிறோம். இதை ஒரு வழக்கமாகவே எப்போதும் வைத்திருக்கிறோம்.

- Advertisement -

சமூக வலைதளங்கள் மற்றும் செல்போன்களால் மக்களின் கவனம் திசை திருப்பப்படுவதால் அர்த்தமுள்ள உரையாடல்கள் படிப்படியாக குறைந்து வருகிறது. கணவன் மனைவிக்குள் இருக்க வேண்டிய அன்னியோன்யமான உறவும் பாதிக்கிறது என்று காஜல் அகர்வால் அந்த நேர்காணலில் பேசியிருக்கிறார்.

அவரது இந்த கருத்துக்கள் இணையத்தில் விவாதத்தை தூண்டி இருக்கின்றன. ஆரோக்கியமான உறவுக்கு தம்பதிக்கிடையான சரியான உரையாடல் மிக முக்கியமான ஒன்றாக இருப்பதாகவும் பலர் காஜல் அகர்வால் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். செல்போனில் நேரத்தை தொலைப்பதை தவிர்த்து குடும்பத்துக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும் என்றும் பலர் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்