- Advertisement -
Homeபொழுதுபோக்குஇஞ்சி வெல்லம் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் புதிய படம் - ஹீரோவாக நடிக்கப் போவது...

இஞ்சி வெல்லம் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் புதிய படம் – ஹீரோவாக நடிக்கப் போவது நடிகர் சூர்யாவா? லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஜாம்பவான் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் மணிரத்னம். ரஜினிகாந்த் நடித்த தளபதி கமல் நடித்த நாயகன் கார்த்தி பிரபு நடித்த அக்னி நட்சத்திரம் மோகன் ரேவதி நடித்த மௌனராகம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் மணிரத்னம்.

கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான தக்லைஃப் படம் மிக மோசமான தோல்வியை சந்தித்தது. அதற்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் பெரிய வெற்றியை வரவேற்பை பெற்ற நிலையில் அந்த படத்தின் 2ம் பாகம் எதிர்பார்த்த அளவுக்கு போகாமல் ஏமாற்றத்தை தந்தது.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதி – சாய்பல்லவி நடிப்பில் இஞ்சி வெல்லம் என்ற ஒரு படத்தை மணிரத்னம் டைரக்ட் செய்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கொல்கத்தாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் தாடி மீசை இல்லாத இளமையான தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

இஞ்சி வெல்லம் படத்துக்கு பிறகு இயக்குனர் மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாக ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஆயுத எழுத்து என்ற படத்தில் மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ளார். இந்த படத்தில் மாதவன் சித்தார்த் ஆகியோரும் நடித்திருந்தனர்.

- Advertisement -

ஆனால் இந்த படம் பெரிய ஹிட் கொடுக்கவில்லை. அதன்பிறகு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சூர்யாவுக்கு இயக்குனர் மணிரத்னம் ஒரு கதை சொல்லியிருக்கிறார். அது சூர்யாவுக்கும் பிடித்துப் போய் இருக்கிறது. ஆனால் அடுத்தகட்டத்துக்கு அது நகராமல் அப்படியே நின்றுபோய் விட்டது.

இந்த நிலையில் 8 ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன கதையை மீண்டும் தூசி தட்டி திரைப்படமாக எடுக்க இயக்குனர் மணிரத்னம் முடிவு செய்திருக்கிறார். இதுகுறித்து நடிகர் சூர்யாவிடம் அவர் பேசியதாக தெரிய வந்துள்ளது. அதனால் இஞ்சி வெல்லம் படத்துக்கு பிறகு சூர்யா நடிக்கும் படத்தை மணிரத்னம் இயக்க வாய்ப்புள்ளதாக ஒரு லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது.

- Advertisement -

சற்று முன்