நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நடிகர் மற்றும் இயக்குனர் சீமான், தொடர்ந்து தவெக ஆட்சி குறித்தும் முதல்வர் விஜய் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். குறிப்பாக விஜய் கருப்பு கோட் அணிவது, கருப்பு பொட்டு வைப்பது, ஜெயிலுக்கு ஆய்வுக்கு சென்றது குறித்து அவர் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
ஆரம்பத்தில் விஜய் அரசியலுக்கு வந்த போது அதை வரவேற்ற சீமான், பிறகு விஜயின் அரசியல் நிலைப்பாடு கொள்கை கோட்பாடுகள் குறித்து பேசிய பிறகு அவரை தாறுமாறாக விமர்சிக்க ஆரம்பித்தார். விஜய் பேசிய விஷயங்களை சீமான் தனது பாணியில் கிண்டலடித்தார். தவெக கட்சியினரை தற்குறி கூட்டம் என்று முதன்முதலில் விமர்சித்ததே சீமான்தான்.
பிறகுதான் மற்ற கட்சியினரும் தவெக கட்சியினரை தற்குறி என்று விமர்சிக்க ஆரம்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தவெக ஆட்சி குறித்து பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி உள்ளது. தாராபுரம் மதுராந்தகம் தொகுதிகளில் நடக்கும் இடைத்தேர்தலில் தவெக தோல்வி உறுதி என்றும் உளவுத்துறை ரிப்போர்ட் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் நடிகர் மற்றும் இயக்குனர் சீமான் பேசியதாவது, தமிழ்நதாட்டில் ஆள்தான் மாறி இருக்கு. ஆட்சி முறை மாறவில்லை. அப்போது வேட்டி சட்டை போட்டுட்டு இருந்தவர் உட்கார்ந்து இருந்தார்.
இப்போது கோட் சூட் போட்டுட்டு ஒருத்தர் உட்கார்ந்துட்டு இருக்கார். அவ்வளவுதான். நோ ரூல்ஸ் ஒன்லி ரீல்ஸ் தான். மெட்ரோ ரயிலில் போனார். ஆனால் ஜெயிலுக்கு ஏன் போனாருன்னு யாருக்குமே தெரியல. எவனோ ஒரு பைத்தியக்கார ஜோசியன் சொல்லி இருப்பான்.
ஜெயில்ல உங்களுக்கு ஒரு கண்டம் இருக்கு. ஒருதடவை உள்ளே போய் கை நனைச்சிட்டு வாங்க. உங்களுக்கு திருஷ்டி அதிகமா இருக்கு. கருப்பு கோட் போடுங்க. கருப்பு பொட்டு வைங்கன்னு சொல்லி இருக்கான். அதுக்கு அவனையே முதலமைச்சராக ஆக்கிட்டு போய் இருக்கலாம் என்று சீமான் அந்த நிகழ்ச்சியில் ஆவேசமாக பேசியிருக்கிறார்.





