- Advertisement -
Homeபொழுதுபோக்குசூப்பர் ஹிட் படங்களில் ரஜினிக்கு தம்பியாக நடிக்க மறுத்த பிரபல இளம் நடிகர் - ...

சூப்பர் ஹிட் படங்களில் ரஜினிக்கு தம்பியாக நடிக்க மறுத்த பிரபல இளம் நடிகர் – அட தேடி வந்த வாய்ப்பை எல்லாம் இப்படி மிஸ் பண்ணிட்டாரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகராக வாய்ப்பு கிடைப்பதே பெரிய குதிரை கொம்புதான். அப்படியே ஒன்றிரண்டு படங்களில் நடித்து மக்களிடம் கொஞ்சம் பரிச்சயம் ஆகி விட்டாலும் தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்தால் மட்டுமே பெரிய அளவில் ஜெயிக்க முடியும். நாளடைவில் ஒரு முன்னணி நடிகராக மாற முடியும். இல்லை என்றால் சில படங்களில் காணாமல் போகும் சூழல் உருவாகும்.

சின்னத்தாயி படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விக்னேஷ். இந்த படத்தில் அவர் நடித்த போது அவருக்கு 17 வயதுதான். ஆனால் ஹீரோவாக நடித்து பெரிய அளவில் கவனமும் வரவேற்பும் பெற்றார். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.

- Advertisement -

தொடர்ந்து பாரதிராஜா இயக்கத்தில் நடிகர் விக்னேஷ் கிழக்கு சீமையிலே படத்தில் நடிகர் விஜயகுமாரின் மகனாக நடித்திருந்தார். அதே போல் பசும்பொன் படத்திலும் நடித்திருந்தார். செல்லக்கண்ணு ராமன் அப்துல்லா பொங்கலோ பொங்கல் கண்ணெதிரே தோன்றினாள் சுயம்வரம் என பல படங்களில் நடித்த விக்னேஷ் பெரிய அளவில் நடிகராக ஜெயிக்கவில்லை.

இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் நடிக்க வந்த அருமையான வாய்ப்புகளையும் அவரே தவற விட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தில் தம்பி கேரக்டரில் நடிக்க முதலில் விக்னேஷிடம்தான் பேசியுள்ளனர். ஆனால் அவர் மற்ற படங்களில் பிஸியாக இருந்ததால் மறுத்திருக்கிறார்.

- Advertisement -

அடுத்து அருணாசலம் படத்திலும் நடிகர் ரஜினிகாந்தின் தம்பியாக நடிக்க ஒரு வாய்ப்பு வந்துள்ளது. ஹீரோவாக நடித்து வரும் சூழலில் தம்பியாக நடித்தால் இமேஜ் கெட்டுவிடும் என்று நினைத்து அந்த படத்திலும் நடிகர் விக்னேஷ் நடிக்காமல் தவிர்த்துள்ளார். ஆனால் நல்ல நடிகராக இருந்தும் நல்ல வாய்ப்புகளை மிஸ் செய்துவிட்டு இப்போது வாய்ப்பே இன்றி விக்னேஷ் தவித்து வருகிறார்.

இந்த இரண்டு படங்களுமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படங்களாகும். குறிப்பாக பாட்ஷா படத்தில் ரஜினி தம்பியாக இன்ஸ்பெக்டர் கேரக்டரில் விக்னேஷ் நடித்திருந்தால் மிகப்பெரிய அங்கீகாரம் ரசிகர்களிடம் கிடைத்திருக்கும். பல படங்களில் அவர் ஹீரோவாக நடித்து முன்னணிக்கு வந்திருக்கலாம் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்