- Advertisement -
Homeபொழுதுபோக்குஉலக சினிமாவையே திரும்பி பார்க்க வைக்கற அவங்க வடபழனியில் இன்னும் சுத்திக்கிட்டு தான் இருக்காங்க -...

உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைக்கற அவங்க வடபழனியில் இன்னும் சுத்திக்கிட்டு தான் இருக்காங்க – மொத ராத்திரி பட இயக்குனர் வேதனை!

- Advertisement -

ஒரு நல்ல திரைப்படம் வெளியாகும் போது அதை தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் கொண்டாட தவறுவதே இல்லை. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் திருமண உறவின் வாயிலாக வாழ்க்கையில் ஒன்று சேருகின்றனர். ஆனால் அந்த திருமணத்தில் மாப்பிள்ளைக்கும் விருப்பமில்லை, மணமகளுக்கும் விருப்பமில்லை.

இந்த சூழலில் குடும்ப உறவுகளின் கட்டாயத்தில் இருவரும் திருமணம் செய்துக்கொள்கின்றனர். மொத ராத்திரி நேரத்தில் அந்த பெண், தாலி கட்டிய புது மனைவி தன்னை விட்டு ஓட பார்க்கிறாள். இதை அறிந்த அந்த பக்குவப்பட்ட கணவன், அவளது காதலனுடன் அவளை அனுப்பி வைக்கவும் முடிவு செய்கிறான்.

- Advertisement -

ஆனால் 3 ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்துக்கொண்டு பைக் பெட்ரோலுக்கு 1000 ரூபாய் பஞ்சராகி கிழிந்து போன பைக் டயரை மாற்ற 2 ஆயிரம் ரூபாய் செலவு செய்யும் அந்த ‘சோப்ளாங்கி’ காதலனிடம் இருந்த எக்ஸ்டரா 500 ரூபாயையும் போலீஸ்காரர் பறித்துக்கொள்கிறார். அதனால் தன் காதலியிடம், நீ என்னுடன் வந்தால் கஷ்டப்படுவாய், உன் கணவருடன் திரும்பிப் போய் விடு என்றும் அந்த காதலன் முடிவு செய்வது படத்தில் அழகான திருப்பம்.

இப்படி யதார்த்த கதைக்களத்தில் உருவான மொத ராத்திரி படத்தின் இயக்குனர் ராஜா கருப்புசாமி, சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்றார். அப்போது ராஜா கருப்பசாமி கூறியதாவது, உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைக்கற அளவுக்கு தரமான படங்கள் எடுக்கக்கூடிய இயக்குனர்கள் இதே சென்னை வடபழனியில் இன்னும் சுத்திகிட்டு தான் இருக்காங்க.

- Advertisement -

என்னை விட திறமையான இதைவிட சிறந்த கதை எல்லாம் வெச்சுக்கிட்டு ஹீரோ கிடைக்காமல் தயாரிப்பாளர் கிடைக்காமல் அப்படியே அந்த படங்கள் எல்லாம் தேங்கி இருக்கு. மலையாள படம் மாதிரி படம் பண்ணுங்க, அவங்க எவ்வளவு நல்லா படம் எடுக்குறாங்க பாருங்க அப்படீங்கற விமர்சனம் தமிழ் சினிமா இயக்குனர்கள் மேல இருக்கு.

தமிழ் சினிமாவில் அந்த மாதிரி படங்கள் ஏற்கனவே நிறைய வந்திருக்கு. அதை மறுக்க முடியாது. தயவு செய்து சின்ன படங்களுக்கு ஆதரவு கொடுங்க என்று இயக்குனர் ராஜா கருப்புசாமி அந்த நேர்காணலில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். வாய்ப்பு கிடைக்காததால் உலக தரத்திலான படங்களை எடுக்க முடியாமல் புதுமுக இயக்குனர்கள் நிறைய பேர் ஏமாற்றத்தில் உள்ளதையும் அவர் இந்த நேர்காணலில் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்