- Advertisement -
Homeபொழுதுபோக்குமக்கள் எதிர்ப்பால் அறிவிப்புகளை உடனே வாபஸ் வாங்கும் சிஎம் விஜய் - இதுக்கு பருத்தி மூட்டை...

மக்கள் எதிர்ப்பால் அறிவிப்புகளை உடனே வாபஸ் வாங்கும் சிஎம் விஜய் – இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே? கலாய்க்கும் நெட்டிசன்கள்!

- Advertisement -

ஒரு அரசாங்கம் என்பது ஒரு அறிவிப்பை செய்வதற்கு முன்பு அதன் சாதக பாதகங்களை நன்கு அலசி ஆராய்ந்து மக்களுக்கு அந்த அறிவிப்பால் எந்த பாதகங்களும் ஏற்படாத வகையில் திட்டங்களை அறிவிக்க வேண்டும். ஒரு தலைபட்சமான அறிவிப்புகளால் எப்போதுமே மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்திக்கும் போது, அதன் எதிர்விளைவுகளை தேர்தல்களில் அந்த ஆட்சியில் இருந்த கட்சி சந்திக்க வேண்டும்.

தவெக கட்சி தலைமையில் முதல்வர் விஜய் பதவியேற்ற சில நாட்களில், அவரது ஆஸ்தான ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டித் என்பவரை அரசு பதவியில் நியமனம் செய்து முதல்வர் விஜய் உத்தரவிட்டார். உங்கள் குடும்ப ஜோதிடருக்கு அரசு பதவி தரலாமா? என்ற கடும் விமர்சனம் எழுந்த நிலையில் அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டு ரத்து செய்யப்பட்டது.

- Advertisement -

அடுத்து தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை தனியார் மயமாக்கும் சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்வதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியாகி, அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அதுவும் ரத்து செய்யப்பட்டது.

கரப்பான் ஜனதா பார்ட்டி ( சிஜேபி) நடத்தும் போராட்டங்களில் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பதை தடை செய்ய கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிக்கையால், பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அதுவும் உடனடியாக வாபஸ் பெறப்பட்டது.

- Advertisement -

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாளையம் பகுதியில் இடதுசாரி உறுப்பினர்களின் குறித்த தகவல்களை திரட்ட தாசில்தார் வாயிலாக அறிக்கை வெளியிடப்பட்டு அது சர்ச்சையை கிளப்பிய நிலையில் உடனடியாக அதுவும் திரும்பப் பெறப்பட்டது. காலை உணவு விரிவாக்கத்திற்கான அடிப்படை வசதிகளை ஆசிரியர்கள் சொந்த நிதியில் மேற்கொள்ள வேண்டும் என்ற சுற்றறிக்கை திரும்ப பெறப்பட்டது.

மேல்மா கிராமத்தில் சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்ட ஆணை வெளியிடப்பட்டு அதற்கும் எதிர்ப்பு கிளம்பியதால் உடனடியாக அதுவும் திரும்பப் பெறப்பட்டது. கடும் எதிர்ப்புக்கு பிறகு சென்னையில் சொத்து வரி உயர்வு நிறுத்தப்பட்டது. தற்போது தகவல் ஒழுங்கு தகவல்களை ஆர்டிஐயின் கீழ் பெற விலக்கு அளித்த உத்தரவும் மக்களின் கட்சிகளின் எதிர்ப்பால் வாபஸ் பெறப்பட்டது. இப்படி அறிவிப்புகளை வெளியிட்டு வெளியிட்டு மக்கள் எதிர்ப்பால் திரும்ப பெறும் முதல்வர் விஜய் குறித்து நெட்டிசன்கள், இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் என கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்