- Advertisement -
Homeபொழுதுபோக்குதிமுக - அதிமுகவை கூட்டுக் களவாணி என்று சொல்லும் அவர்தான் உண்மையான ஒரிஜினல் களவாணி -...

திமுக – அதிமுகவை கூட்டுக் களவாணி என்று சொல்லும் அவர்தான் உண்மையான ஒரிஜினல் களவாணி – அமமுக நிறுவனர் டிடிவி தினகரன் பகீர் குற்றச்சாட்டு!

- Advertisement -

முதல்வர் விஜய், கடந்த சட்டசபை தேர்தலில் போது தனித்து போட்டியிட்டு 108 இடங்களில் வெற்றி பெற்றார். அதன்பிறகு திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சிகளை சார்ந்த எம்எல்ஏக்கள், 13 பேர் தவெக பக்கம் சென்று விட்டனர். காங்கிரஸ் இடதுசாரிகள் விசிக முஸ்லீம் லீக் போன்ற கட்சி எம்எல்ஏக்கள் விஜய்க்கு ஆதரவு தந்தனர்.

இதில் காங்கிரஸ் விசிக முஸ்லீம் லீக் கட்சி எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம் தரப்பட்டது. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு, கூட்டணியில் நாங்கள் இல்லை என்றும் தெளிவாக அப்போதே அறிவித்துவிட்டது.

- Advertisement -

இந்த நிலையில் டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மன்னார்குடி தொகுதி எம்எல்ஏ காமராஜ், அந்த கட்சியில் இருந்து விலகி தவெக கட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்த நிலையில், கடந்த மே மாதம் அமமுக கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். மேலும் தவெக தலைவர் விஜய், தங்களது கட்சி எம்எல்ஏவை விலைக்கு வாங்கி விட்டார் என்றும் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியிருந்தார்.

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ( அமமுக) நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது, திமுக – அதிமுக இருவரும் இணைந்து ஆட்சியமைக்க இருந்தார்கள் இரண்டு பேரும் கூட்டுக் களவாணிகள் என்று முதல்வர் விஜய் பேசும்போது கூறுகிறார்.

- Advertisement -

நீங்க பண்ணியிருக்கிறதே களவாணி வேலைதானே? திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளை நீங்க களவாடி அவங்க ஆதரவோடு அவர்களுக்கு மந்திரி பதவி கொடுத்து ஆட்சியமைத்து இருக்கீங்க? அமமுக எம்எல்ஏவை களவாடி தான் நீங்க லெட்டர் கொண்டு போய் கொடுத்தீங்க?

இன்னைக்கு ஆறு எம்எல்ஏக்களை ரிசைன் பண்ண வெச்சதே ஒரு களவாணித்தனம் தானே? அதனால் உண்மையான ஒரிஜினல் களவாணி திரு விஜய் அவர்கள் தான் என்று டிடிவி தினகரன் பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்