- Advertisement -
Homeபொழுதுபோக்குராதாவை பார்த்து நான் ஆதங்கப்பட்டது அந்த ஒரு விஷயத்தில் மட்டும்தான்- ஓபனாக பேசிய நடிகை அம்பிகா!

ராதாவை பார்த்து நான் ஆதங்கப்பட்டது அந்த ஒரு விஷயத்தில் மட்டும்தான்- ஓபனாக பேசிய நடிகை அம்பிகா!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை அம்பிகா கூறியதாவது, என்னுடைய ஆரம்பகால சினிமா பயணம் என்பது மிகவும் மெதுவாக இருந்தது. மேலேயும் கீழேயும் போய் வந்தது. ஆனாலும் அந்த பயணத்தை ரசித்தேன். குதிரைக்கு கடிவாளம் போட்டது போல நடிப்பின் மீது மட்டுமே என்னுடைய முழு கவனமும் இருந்தது. ராதாவை பொருத்த வரை எப்படி என்றால் எடுத்தவுடனே நிறைய படங்கள் ஹிட் ஆனது.

எனக்கு அப்படி படங்கள் ஹிட் ஆகவில்லை. ராதாவுக்கு கோவில் கட்டணும். திரையில் அவர் வரும்போது கையில் கற்பூரம் ஏத்தி இப்படி சுத்தி காட்டறாங்க. காயின்ஸ்சை வாரி இறைக்கறாங்க. அதை எல்லாம் பார்த்து என்ன இது என்று ஆச்சரியமாக நினைப்போம். எங்கேயோ இருந்து வந்த ஒரு பொண்ணுக்கு இப்படி கற்பூர ஆரத்தி காட்டறாங்க, பூத்தூவறாங்க. கோவில் கட்டணும் என்று சொல்றாங்க. இது எல்லாம் ஒரு அதிர்ஷ்டமான விஷயம்.

- Advertisement -

ஆனா என்னுடைய அதிர்ஷ்டம் என்பது மிகவும் மெதுவாக இருந்தது. அவங்களுக்கு எடுத்தவுடனே ஹிட் அப்படி இருந்தது. இதில் பொறாமையோ எதுவோ கிடையாது. எந்தவிதமான பொறாமையும் எனக்கு வந்தது கிடையாது. யார் சம்பாதிச்சாலும் அது ஒரு வீட்டுக்குள்ள தான் வரப் போகுது? சம்பாத்தியமும் பேரும் புகழும் வருது.

அவங்களை பார்த்து நான் பொறாமைப்பட்ட ஒரே விஷயம் அவங்க டான்ஸ் திறமையை பார்த்து மட்டும்தான். அந்த டைம்ல அவங்களை மாதிரி டான்ஸ் பண்றவங்க யாரும் இல்லே. அதுக்கு அப்புறம் இந்த டைம்ல வந்தது சிம்ரன். அதனால் அந்த டான்ஸ் பார்த்து மட்டும்தான் அதுகூட பொறாமை கூட. ச்சே நமக்கு இந்த மாதிரி டான்ஸ் பண்ண வரலையே என்கிற ஒரு ஆதங்கமான மன வருத்தம்தான்.

- Advertisement -

என்னம்மா டான்ஸ் பண்றாங்க? நாம பண்ணினா அப்படி அழகா இல்லையே? அப்படீன்னு குட்டியூண்டா ஒரு பீலிங் இருக்குமே அதுதான். பொறாமை எல்லாம் எனக்கு வந்தது கிடையாது. நான் அப்போ பேஷன் டிசைனிங்கில் இருந்ததால் ராதாவுக்கு இந்த மாதிரி டிரஸ் போடு அந்த மாதிரி டிரஸ் போடு என்று சொல்லி கொடுத்திருக்கிறேன்.

நிறைய படங்களில் மேகஸின்ல வர்ற போட்டோஸ் எல்லாம் கட் பண்ணி மத்த ஆக்ட்ரஸ் போட்டிருக்கிற டிரஸ்சை கலர் மாத்தி இந்த மாதிரி போடச் சொல்லி ஐடியா எல்லாம் கொடுப்பேன். அதுக்கு அப்புறம் அவங்களே அதை எல்லாம் பார்த்துக்கிட்டாங்க என்று தனது தங்கை நடிகை ராதா குறித்து நடிகை அம்பிகா வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்