- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் சுப்ரீம் ஸ்டார் என்பதே எனக்குத் தெரியாது, உருட்டுல இது உலக மகா உருட்டா இருக்குதே?...

நான் சுப்ரீம் ஸ்டார் என்பதே எனக்குத் தெரியாது, உருட்டுல இது உலக மகா உருட்டா இருக்குதே? – நடிகர் சரத்குமாரை கலாய்க்கும் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை தந்தவர் நடிகர் சரத்குமார். சுப்ரீம் ஸ்டார் என அழைக்கப்படும் இவர் கடந்த 1990களில் முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர். குறிப்பாக இவரது நடிப்பில் வெளிவந்த சேரன் பாண்டியன் நாட்டாமை சூரிய வம்சம் நட்புக்காக சூரியன் போன்ற பல படங்கள் பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பு பெற்றன.

ஒரு கட்டத்துக்கு பிறகு நடிகர் சரத்குமார் குணச்சித்திர வேடங்களில் அதிகமாக நடித்து வருகிறார். சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் கேரக்டரில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது. அதேபோல் போர்த்தொழில் படத்திலும் போலீஸ் அதிகாரியாக அவரது நடிப்பு ரசிகர்களால் அதிகமாக பாராட்டப்பட்டது.

- Advertisement -

இப்போது நடிகர் சரத்குமார் நடித்துள்ள 150வது படம் தி ஸ்மைல் மேன். ஷியாம் பிரவீண் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சிஜா ரோஸ் பரியதர்ஷினி பேபி ஆலியா சுரேஷ் சந்திரா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வருகிற 27ம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் நினைவு குறைபாடு உடைய ஒரு போலீஸ் அதிகாரியாக அவர் நடித்திருக்கிறார்.

தி ஸ்மைல் மேன் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் நடிகர் சரத்குமார் பேசியதாவது, க்ரைம் படங்களை ரசிகர்கள் விரும்பி பார்க்கிறார்கள். ஒரு குற்றத்தை எப்படி துப்பு துலக்குகிறார்கள் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். நடிகர்களை பொருத்தவரை நடிப்பில் தங்களது முழு அர்ப்பணிப்பை கொடுக்க வேண்டும். அதற்கான தீர்வு ரசிகர்கள் கையில் தான் இருக்கிறது.

- Advertisement -

சில நேரங்களில் கதைகளில் குழப்பம் ஏற்படலாம். அது சகஜம்தான். அதுவும் க்ரைம் திரில்லர் கதைகளில் எதுவும் நடக்கும். இந்த படம் அறிவிக்கும் போது எனக்கு இது 150வது படம். ஆனால் படம் தாமதமாக வந்திருக்கிறது. அதனால் தான் இந்த 150 என்பதில் சற்று குழப்பம் ஏற்பட்டது. இந்த படம் முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேஷன் திரில்லர் என்பதால் உடனே நான் நடிக்க கமிட்டானேன். இது என்னுடைய 150 வது படம் என்பது இன்னொரு சிறப்பாக உள்ளது.

இத்தனை படங்களிலும் நான் நடிக்க காரணம் ரசிகர்களின் ஆதரவும் இறைவன் அருளும் தான் என்று நினைக்கிறேன். என்னை சுப்ரீம் ஸ்டார் என்று ரசிகர்கள் அழைக்கிறார்கள், நான் சுப்ரீம் ஸ்டாரா, இல்லையா என்பது எனக்கு தெரியாது. எப்போதும் ரசிகர்களின் அன்பும் ஆதரவு தான் நான் விரும்பும் பெரிதும் விரும்பும் பரிசு என்று சரத்குமார் பேசியிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்