- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் தனுஷ் நடித்த ஓம் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு - அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு!

நடிகர் தனுஷ் நடித்த ஓம் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு – அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு!

- Advertisement -

நடிகர் தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டில் வெளியான படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. குறிப்பாக அவர் நடித்த கர படமும் ஏமாற்றத்தை தந்து விட்டது. ராயன் படத்துக்கு பிறகு தனுஷ் நடித்த குபேரா கேப்டன் மில்லர் இட்லி கடை போன்ற படங்களும் எதிர்பார்த்த அளவுக்கு சரியாக போகவில்லை.

இதற்கிடையே அவர் தனது சகோதரி மகன் பவிஷ் என்ற இளைஞரை அறிமுக ஹீரோவாக நடிக்க வைத்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் தனுஷ் இயக்கினார். அந்த படமும் படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஓம் என்ற படத்தில் தனுஷ் நாயகனாக நடித்துள்ளார்.

- Advertisement -

நடிகர் தனுஷ்க்கு சொந்தமான வுண்டர்ஃபார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஓம் படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் தனுஷ் உடன் மலையாள நடிகர் மம்முட்டி சாய்பல்லவி ஸ்ரீலீலா இந்திரன்ஸ் மற்றும் நஸ்ருதீன் ஷா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் ஓம் படம் வருகிற அக்டோபர் 16ம் தேதி என்று ஏற்கனவே தகவல் வெளியானது. ஆனால் அக்டோபர் 15ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படம் ரிலீஸ் என்பதால் ஓம் படத்தை நடிகர் தனுஷ் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தார். அதே நேரத்தில் தீபாவளிக்கு இந்த படம் வெளியாகலாம் என்றும் கூறப்பட்டது.

- Advertisement -

ஆனால் தீபாவளிக்கு நடிகர் சூர்யா நடித்த சீன் என்ற படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை மலையாள இயக்குனர் ஜீத்து மாதவன் இயக்கி உள்ளார். இந்த படம் ரிலீஸ் காரணமாகவும் ஓம் படம் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக நடிகர் தனுஷ் கடந்த வாரத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் வருகிற நவம்பர் மாதம் 20ம் தேதி நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ஓம் படம் திரைக்கு வர உள்ளதாக படக்குழு தரப்பில் அதிகாரபூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நடிகர் மம்முட்டி தமிழில் நடிகர் ரஜினிகாந்துக்கு பிறகு அவரது முன்னாள் மருமகன் தனுஷ் உடன் இந்த படத்தில் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.,

- Advertisement -

சற்று முன்