- Advertisement -
Homeபொழுதுபோக்குஇடைத்தேர்தல் பிரசாரத்தில் மாட்டு வண்டி ஓட்டி முருங்கைகாய் பறித்த முதல்வர் விஜய் - நாளை நடக்குது...

இடைத்தேர்தல் பிரசாரத்தில் மாட்டு வண்டி ஓட்டி முருங்கைகாய் பறித்த முதல்வர் விஜய் – நாளை நடக்குது ஓட்டுப்பதிவு, 9ம் தேதி ரிசல்ட்!

- Advertisement -

கடந்த முறை தவெக கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் பெரும்பாலான தொகுதிகளில் கட்சியின் தலைவர் விஜய் நேரடியாக தேர்தல் பிரசாரம் செய்யவில்லை. பல தொகுதிகளில் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டு பிறகு சில காரணங்களால் அது ரத்து செய்யப்பட்டது என்று கட்சி தலைமை அறிவித்தது.

எனினும் 108 தொகுதிகளில் தவெக கட்சி அமோகமாக வெற்றி பெற்றது. அதே வேளையில் விஜய் தேர்தல் பிரசாரம் செய்த பல தொகுதிகளில் தவெக கட்சி தோல்வியை சந்தித்தது. அங்கு அதிமுக அல்லது திமுக கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த சூழலில் தாராபுரம் மதுராந்தகம் தொகுதிகளில் நாளை 6ம் தேதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. வருகிற 9ம் தேதி பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த நிலையில் அதிமுக திமுக தவெக மும்முனை போட்டியில் யார் ஜெயிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கடந்த சட்டசபை தேர்தலின் போது பிரசார பஸ்சை விட்டு இறங்காமல் மக்களை பார்த்து கையசைத்து விட்டு மட்டுமே சென்ற விஜய், இடைத்தேர்தல் நடக்கும் தாராபுரம் மதுராந்தகம் தொகுதிகளில் தலா 2 நாட்கள் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதில் ஒரு நாள் தவெக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

- Advertisement -

மற்ற 2 நாட்கள் தாராபுரம் மதுராந்தகம் தொகுதிகளில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ரோடு ஷோ சென்று மக்களை சந்தித்தார். இதில் ரோட்டோர டீக்கடையில் டீ குடித்தார். வயல் வெளியில் இறங்கி டிராக்டர் ஓட்டினார். நேற்று தாராபுரத்தில் மாட்டுவண்டி ஓட்டிய முதல்வர் விஜய், அங்குள்ள ஒரு தோட்டத்தில் முருங்கைகாய் பறித்தார்.

தொகுதியில் முகம் காட்டினாலே போதும் என்று சொல்லப்பட்ட விஜய் இன்று முதல்வராக உள்ள சூழலில் இடைத்தேர்தல் நடக்கும் இந்த 2 தொகுதிகளிலும் 4 நாட்கள் ஒதுக்கி தேர்தல் பிரசாரம் செய்திருக்கிறார். கடந்த 4 மாதங்களில் தவெக ஆட்சிக்கு வந்தது முதல் மக்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தி, வெறுப்பு காரணமாகவே விஜய்க்கு இப்படி ஒரு சிக்கலான சூழல் உருவாகி உள்ளது. அவர் மட்டும் மக்கள் விரும்பிய நல்லாட்சியை தந்திருந்தால் இவ்வளவு போராட்டம் இருந்திருக்காது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்