நடிகர் ரஜினிகாந்த் இப்போது தர்மன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து டைரக்ட் செய்து வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் கமல்ஹாசன் இந்த படத்தை சொந்தமாக தயாரிக்கிறார். இந்த படத்தில் சிம்ரன் ராஷிக்கண்ணா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
தர்மன் படத்தின் 3 கட்ட படப்பிடிப்பு இதுவரை நடந்து முடிந்துள்ளது. இந்த படத்தை வருகிற 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் டாக்டர் கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது ஏற்கனவே தெரிந்த தகவல்தான்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய ஒரு காட்சியை சென்னையில் உள்ள ஒரு கோவிலில் வைத்து எடுக்க இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து திட்டமிட்டு இருக்கிறார். ஆனால் ரஜினி படம் ஷூட்டிங் கோவிலில் நடக்கிறது என்று தெரிந்தால் அங்கு ரசிகர்கள் கூட்டம் பலமடங்கு திரண்டு விடும்.
அதுவும் சென்னையில் என்றால் மொத்த ஏரியாவும் கோவில் பகுதியில் சூழ்ந்து விடும். இப்படிப்பட்ட சூழலில் கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டத்தில் படப்பிடிப்பை நடத்துவதும் சிரமம். மேலும் கோவிலுக்குள் தேவையற்ற பரபரப்பான சூழல் உருவாகி பக்தர்களுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற நிலமை உருவாகி இருக்கிறது.
இதுகுறித்து தெரிந்துக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் உள்ள கோவில் படப்பிடிப்பு வேண்டாம். கர்நாடகா மாநிலம் மைசூரில் சோமநாதபுரம் பகுதியில் ஒரு கோவில் உள்ளது. அங்கு ரசிகர்கள் கூட்டம் அவ்வளவாக இருக்காது. படப்பிடிப்புக்கும் எந்த தொந்தரவும் ஏற்படாது என்று கூறி யோசனை தந்திருக்கிறார்.
அதன்பிறகு ரஜினிகாந்த் கூறிய அந்த சோமநாதபுரம் கோவிலில் ரஜினி பங்கேற்க வேண்டிய அந்த காட்சியை எந்த சிரமமும் இல்லாமல் எடுத்துக்கொண்டு படப்பிடிப்புக்குழு சமீபத்தில் சென்னை திரும்பியிருக்கிறது. இந்த சோமநாதபுரம் கோவிலில் ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த அருணாசலம் லிங்கா போன்ற படங்களின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.





