கடந்த 1980 – 90களில் கவர்ச்சியான காட்சிகள் நிறைந்த மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களுக்கு ஏ சான்றிதழ் தணிக்கை வாரியத்தால் வழங்கப்படுவது வழக்கம். கவர்ச்சியான காட்சிகள் நிறைந்த படம் என்று சொல்லாமல் ஏ படம் என்றாலே அது ஆபாச படம் என்கிற அளவுக்கு அப்போது ரசிகர்களுக்கு அடையாளமாக இருந்தது.
அப்படிப்பட்ட ஏ படங்களில் ஷகிலா சில்க் ஸ்மிதா உள்ளிட்ட சில நடிகைகள் நடித்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றனர். 1990களில் மலையாளத்தில் ஓடிய ஷகிலா நடித்த ஏ படங்களால் மம்முட்டி மோகன்லால் போன்ற சூப்பர் ஸ்டார் படங்களில் வசூல் கணிசமாக குறைந்து விட்டதாக ஒரு தகவலும் வெளியானது.
அதே போல் இப்போது தமிழ் சினிமாவிலும் ஏ படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் இதில் ஆபாச காட்சிகள் அவ்வளவாக இருப்பதில்லை. அதற்கு பதிலாக வன்முறை காட்சிகள் இரத்தம் பீய்ச்சியடிக்கும் காட்சிகள் நிறைந்திருக்கின்றன. 10 படம் வெளியானால் அதில் 4 படங்கள் ஏ சான்றிதழ் பெறும் அளவுக்கு வன்முறை படங்களாக மட்டுமே இருக்கின்றன.
கடைசியாக நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் கூலி. சன் பிக்சர்ஸ் தயாரித்து இருந்த இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்திருந்தார். இந்த படத்தில் வன்முறை காட்சிகள் பல இடங்களில் பயங்கரமாக இருந்தன. எலக்டரிக் சேரில் மனிதர்களை சாம்பலாக்கும் காட்சிகள் ரசிகர்களை கலவரப்படுத்தியது.
அதனால் இந்த படத்துக்கு சென்சார் தரப்பில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. ரஜினி படங்கள் என்றாலே ஃபேமிலி ஆடியன்ஸ் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். பெண்கள் குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் படம் பார்க்க வருவது வழக்கமாக உள்ளது. ஆனால் கூலி படம் ஏ சான்றிதழ் பெற்றதால் பெண்கள், குழந்தைகள் இந்த படத்தை பார்க்க தியேட்டர்களில் அனுமதி கிடைக்கவில்லை.
இது ரஜினிக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்தது. இந்த ஏமாற்றம் படத்தின் வியாபாரத்திலும் வெற்றியிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் வருகிற 15ம் தேதி திரைக்கு வர உள்ள ஜெயிலர் 2 படம், வன்முறை காட்சிகள் நிறைந்து இருந்ததால் ஏ சான்றிதழ் தரப்படும் சூழல் இருந்தது. அப்படிப்பட்ட அதீத வன்முறை காட்சிகளை நீக்க செய்து. இந்த படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைக்க செய்திருக்கிறார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக ரஜினி பலவிதமான முயற்சிகளை செய்தததாகவும் கூறப்படுகிறது.





