தமிழ் சினிமாவில் ஈரமான ரோஜாவே என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை மோகினி. தஞ்சாவூரை சேர்ந்த இவரது இயற்பெயர் மகாலட்சுமி. தயாரிப்பாளராக இருந்து டைரக்டராக மாறிய கே ஆர் தான் இவருக்கு மோகினி என்று பெயர் மாற்றினார். மோகினியின் நடனத் திறமை தனித்துவமான அழகு பல படங்களில் பாடல்களில் அவருக்கு உதவியது. தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் இந்தி மொழிகளில் மோகினி நடித்து இருக்கிறார்.
குறிப்பாக தமிழில் நான் பேச நினைப்பதெல்லாம் கண்மணி சின்ன மருமகள் ஜமீன் கோட்டை குற்றப்பத்திரிக்கை உள்ளிட்ட பல படங்களில் மோகினி நடித்திருந்தார். ஆனாலும் நடிகை மோகினி நீண்ட காலம் தமிழ் சினிமாவில் நீடிக்கவில்லை.இதற்கு முக்கிய காரணம் அவரை தவறாக வழங்கி நடத்தியவர்கள் தான். பெரிய பெரிய படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தபோது எல்லாம் அதை தவிர்த்து விட்டு அவரை சிறிய படங்களில் நடிக்க வைத்தனர்.
ஈரமான ரோஜாவே படம் முடிந்த பிறகு அவருக்கு பி வாசு இயக்கிய சின்னத்தம்பி படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. அவருக்காக 10 நாட்கள் படக்குழு காத்திருந்தது. ஆனால் ஈரமான ரோஜாவே படம் ரிலீஸ் ஆகட்டும். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும். அதன்பிறகு பெரிய சம்பளத்துடன் அடுத்த படத்தில் நடிக்கலாம் என்று அவருக்கு ஆலோசனை கூறிவிட்டனர். இதனால் அந்த படத்தை தவற விட்டார் மோகினி.
பின்னர் சின்னத்தம்பி படத்தில் நடிகை குஷ்பு நடித்து தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திர நடிகையாக மாறினார். அதேபோல் வாரணம் ஆயிரம் படத்தில் சிம்ரன் நடித்த கேரக்டரில் மோகினி தான் முதலில் நடிக்க இருந்தார். அது சின்ன கேரக்டர் என்று வேண்டாம் என்று கூறி தடுத்து விட்டனர். மோகினியின் கண்கள் மட்டும் தோற்றத்தால் கவரப்பட்ட இயக்குனர் மணிரத்னம் அவரை தன் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினார்.
திருடா திருடா என்ற படத்தில் ஹீரா நடித்த கேரக்டரில் முதலில் மோகினி தான் நடிப்பதாக இருந்தது. அதேபோல் தளபதி படத்தில் பானுப்பிரியா நடித்த கேரக்டரிலும் மோகினி தான் நடிப்பதாக இருந்தது.இந்த 2 முக்கிய படங்களிலும் மோகினி நடிக்காமல் போய்விட்டார். இதற்கு காரணம் அவருக்கு அப்போது வழிகாட்டியாக இருந்தவர்கள் அந்த படங்களில் நடிக்க விடாமல் தடுத்து விட்டனர்.
பின்னர் சினிமா வாய்ப்பே இல்லாமல் போனதால் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் மோகினி செட்டில் ஆகிவிட்டார். ஒரு அழகான திறமையான நடிகை அப்போது அவருடன் இருந்தவர்களின் தவறான வழிகாட்டுதலால் அவரது பிரகாசமான சிறந்த எதிர்காலத்தை தடுத்து விட்டனர் என்பதே உண்மை. இப்படி ஒரு நடிகை திறமை அழகு இருந்தும் ஜெயிக்க முடியாமல் போவதற்கு தவறான வழிகாட்டிகளே காரணமாகி விட்டனர்.





