- Advertisement -
Homeபொழுதுபோக்குஇனிமேல் அந்த மாதிரி நான் நிச்சயமாக செய்ய மாட்டேன் - திருப்பதி கோவில் முன் உறுதியளித்த...

இனிமேல் அந்த மாதிரி நான் நிச்சயமாக செய்ய மாட்டேன் – திருப்பதி கோவில் முன் உறுதியளித்த நடிகை அட்டக்கத்தி நந்திதா

- Advertisement -

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், தன் வசீகர அழகால், நடிப்பால் சில நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அங்கீகாரமும் வரவேற்பும் கிடைத்து விடுகிறது. அவர்கள் நடித்த படங்களை பார்க்க, ரசிகர்களும் ஆர்வம் காட்டுவதால், சினிமாவில் அவர்களது இமேஜ் உயர்ந்து விடுகிறது.

அந்த வகையில், பா ரஞ்சித் இயக்கத்தில் அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நந்திதா. அதனால் அவருக்கு அட்டக்கத்தி நந்திதா என்ற அடைமொழியும் உண்டு. தமிழில் தொடர்ந்து முண்டாசுப்பட்டி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

- Advertisement -

ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சாலை, புலி, உப்புக்கருவாடு, இடம் பொருள் ஏவல், அஞ்சல, கலகலப்பு 2, காத்திருப்போர் பட்டியல், அசுரவதம், எம்ஜிஆர் மகன், நெஞ்சம் மறப்பதில்லை , ரணம் போன்ற பல படங்களில் நடித்தும் பெரிய அளவில் தமிழில் நந்திதா வரவேற்கப்படவில்லை.

இதையடுத்து தெலுங்கு பக்கம் ஒதுங்கினார் அட்டக்கத்தி நந்திதா. அன்று முதல் இன்று வரை, தெலுங்கு சினிமாவில் நாயகிகளை, டூ பீஸ் உடையில் ஆட விடுவதும், ஹீரோக்களுடன் குத்தாட்டம் போட வைப்பதும், டபுள் மீனிங் பேசியபடி நடிக்க வைப்பதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. தெலுங்கு மொழியில் திரையுலக கலையின் கலாசாரம் அதுவாகவே இருந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் சினிமா வாய்ப்புக்காக அங்கு சென்ற நந்திதாவும், ஒரு கட்டத்தில் கவர்ச்சி நாயகியாக நடிக்க ஆரம்பித்தார். பாடல் காட்சிகளில், கிளாமராக நடித்தார். தமிழில் அவரை ஹோம்லியான தோற்றத்தில், நடிப்பில் பார்த்து அசந்த ரசிகர்கள், தெலுங்கில் அவரது நடிப்பை, கவர்ச்சியை பார்த்து அதிர்ந்து போயினர்.

இதுமட்டுமின்றி தெலுங்கில் திகிலூட்டும் சில பேய் படங்களிலும், நந்திதா நடித்திருந்தார். சமீபத்தில் திருப்பதி கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இனிமேல் ஹாரர் படங்களில் நடிக்க மாட்டேன். அதில் உறுதியாக இருக்கிறேன், என கூறினார். ஆனால் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று அவர் கூறாதது, தமிழ் ரசிகர்களுக்கு தான் ஏமாற்றமாக இருந்தது.

- Advertisement -

சற்று முன்